மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

கடந்த சில நாட்களில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மணலி புதுநகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com