search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை திருட்டு"

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர்.
    • பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி. இவரை சந்திக்க தண்டையா ர்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் அவரது மருமகள் சுப்புலட்சுமி (28) அடிக்கடி வந்து சென்றார். அப்போது பூமாதேவியுடன், சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. ஆனால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படவில்லை. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் பூமாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். பூமாதேவியின் வீட்டுக்கு சென்ற போது கதவு பூட்டு சாவியை சுப்புலட்சுமி திருடி வைத்து கொண்டார். பின்னர் பூமாதேவி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நேரத்தை நோட்டமிட்டு கதவை திறந்து சென்று உள்ளார். ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

    • கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.

    சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

    இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
    • போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    பரமத்திவேலூர்:

    சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.

    அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மர்ம கும்பலுக்கு வலை வீச்சு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மும்முனி புறவழி சாலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் உள்ளது.

    இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டி யலில் பணம் மற்றும் நகை களை செலுத்து கின்றனர்.

    இக்கோவிலில் சண்முகம் என்பவர் பூசாரியாக உள்ளார். வழக்கம் போல் இருந்து பூஜைகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை கோவிலின் நடை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் கோவிலில் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

    இன்று காலை கோவில் திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம கும்பல் உண்டியலில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மூதாட்டி அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.
    • ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மனைவி குண்டு மாயி (வயது 80). இவர் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக பழனி ரெயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரெயில் நிலையத்தில் கொள்ளையர்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். எனவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை பையில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். அதன்படி அவர் அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து அந்த பேப்பரை குண்டு மாயி திறந்து பார்த்தார். அப்போது அதில் இரும்பு போல்ட், நட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீட்டு கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது.
    • இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியாபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மலையம்மாள் (வயது55). இவரது கணவர் முத்துச்சாமி, ஏற்கனவே இறந்து விட்டார்.

    இவரது மகன் மானாமதுரையிலும், மகள் ராஜபாளையத்திலும் வசித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மலையம்மாள் மகனை பார்ப்பதற்காக மானாமதுரை சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்காரரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மலையம்மாள் ஊருக்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின், மோதிரம் உள்பட 8 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் மலையம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள வைரமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜாக்குலின் கிறிஸ்டி (வயது 35). இவர் சம்பவத்தன்று மின் மயானம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஜாக்குலின் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூர்யா (வயது 24), மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் மகன் வைரமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையிலான தனிப்படையினர் உதவியுடன் சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வைரமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர், கட்டவாக்கம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம் (வயது 55). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கும்போல கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரொக்கப்பணம், தங்க நகைகளை வாரி சுருட்டி கொண்டு தப்பி சென்றனர். மாலதி பணி முடித்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து சதாசிவம் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவில்களில் திருடிய நகைகளையும் மீட்டனர்.
    • பல கோவில்களில் நகைகளை திருடியதாக கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் கங்கை அம்மன் கோவில், முத்து விநாயகர் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் தினமும் காலை நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்பதால் கோவில் நடையை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 17-ந்தேதி கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண் திடீரென கோவில் கருவறைக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகையை திருடி சென்றுள்ளார். மேலும், அதன் அருகில் உள்ள மேலும் 2 கோவில்களிலும் அம்மன் கழுத்தில் கிடந்த நகையை திருடிச்சென்றார்.

    இதுகுறித்து ஊர் நாட்டாமை செல்வகுமார் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நகையை திருடிச்சென்ற பெண் குறித்து விசாரித்தனர்.

    இதுதொடர்பாக கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளத்தை அடுத்த ராமசாமியாபுரத்தை சேர்ந்த அருள் செல்வன் மனைவி சண்முக சுந்தரி (வயது 35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கோவில்களில் திருடிய நகைகளையும் மீட்டனர். இவர் ஏற்கனவே பல கோவில்களில் நகைகளை திருடியதாக கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராபர்ட் வீட்டில் இருந்த 26 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
    • சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை புதிய பங்களா தெருவை சேர்ந்தவர் ஷாலினி. இவர் செயலி ஒன்றின் மூலமாக பெரும் பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் என்ற வாலிபரை வேலைக்கு சேர்த்திருந்தார்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராபர்ட் வீட்டில் இருந்த 26 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராபர்ட்டை கைது செய்தனர்.

    • தொடர் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி கீழ்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது25).

    இவர் நேற்று வீட்டில் குளிக்க சென்றபோது தனது 4 பவுன் செயினை ஜன்னல் ஓரம் கழற்றி வைத்திருந்தார். குளித்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது ஜன்னல் ஓரம் வைத்த 4 பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி ஏ.கொல்லஅள்ளி பகுதியில் ஒரு வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் புகுந்து திருட முயன்றுள்ளார். அப்போது சத்தம்கேட்டு வீட்டின் உரிமையாளர் எழுந்து வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதேபோன்று பிடமனேரி பகுதியில் ஒரு பெண் நடந்து சென்றபோது மர்மநபர் ஒருவர் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றார். அப்போது அந்த பெண் திருடன், திருடன் என்று கூச்சலிட்டதால், அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பித்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் கொள்ளை முயற்சி காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

    எனவே, தருமபுரி போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டின் கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்து ஜெயந்தியை அழைத்துச் சென்றார்.
    • சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென், அவ்வையார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பஸ்சில் அகரம்தென் பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கினார். தாயாரை அழைத்துச்செல்வதற்காக அவருடைய மகள், வீட்டின் கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்து ஜெயந்தியை அழைத்துச் சென்றார்.

    அப்போது இவர்களது வீட்டின் அருகே நின்றிருந்த மர்ம பெண், ஜெயந்தி வருவதை கண்டதும் அங்கிருந்து அவசர அவசரமாக சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த ஜெயந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 20 பவுன் நகையை அந்த பெண் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×