search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு அங்காளம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகை திருட்டு
    X

    ஈரோடு அங்காளம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகை திருட்டு

    • பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக நாகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் நாகராஜ் நேற்று வழக்கம்போல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்து வந்தார்.

    பின்னர் பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்தபோது, கோவில் பூசாரி சாமி கருவறையில் அலங்கார பணியில் இருந்தபோது, சாமி கும்பிடுவது போல வந்த 35 வயது மர்மநபர் கருவறைக்குள் நைசாக உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் செயினை திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×