வீடு புகுந்து நகை திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது

வீடு புகுந்து நகை திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து  நகை திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது
Published on

மதுரை

மதுரை சிந்தாமணி புதுத்தெரு நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி (வயது26). மணிகண்டன் குடும்பத்து டன் வெளியூர் சென்றி ருந்தார். இதனால் தனது வீட்டின் கதவை பூட்டி மகாலட்சுமியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் மணிகண்டன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்தி ருந்த 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து கீரைத்துறை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகாலட்சுமி வீட்டின் கதவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

உசிலம்பட்டி குருவக் குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் அஜய் என்ற ரோகித் (21). இவர் மதுரை ஆரப்பாளை யம் மெயின் ரோட்டில் கார்ப்பரேசன் காலனி தெரு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து கரிமேடு போலீசில் அஜய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலி பர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com