என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
- மீண்டும் அவர்கள் வீடு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
- பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் போன்ற 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது. தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சவுளூரைச் சேர்ந்தவர் அருண் (வயது31). இவரது மனைவி புவனேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் பெங்களூ–ருவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இதற்காக 3 மாதம் ஒருமுறை தான் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். அதன்படி கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
சம்பவத்தன்று திருவிழா பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் கோவிலுக்கு சென்றனர். மீண்டும் அவர்கள் வீடு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் போன்ற 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது. தெரியவந்தது.
இதுகுறித்து அருண் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






