பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு

கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com