search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார்"

    • போலீசில் தந்தை புகார்
    • திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள தெற்கேகுழிவிளை அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தொழிலாளி.

    இவரது மகள் அபிஷா (வயது23). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிஷா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பிறகு அபிஷா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்ப த்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    அபிஷாவின் செல் போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ற தகவல் தான் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவட்டார் போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • குளத்தின் கரையை கற்களால் கட்டி பலப்படுத்த வேண்டும்
    • பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆற்றூர் குட்டக்குழி சாலையில் உள்ளது தொழிச்சல் ஈயான் குளம். சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

    சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாழ்பட்டு கிடந்த இந்த குளம் தூர்வாரப்பட்டு இரவு பகலாக மண் எடுத்து மாற்றப்பட்டது. இங்கிருந்து எடுக்கப்பட்ட மண் மற்றும் வண்டல் மண்ணை தாழ்வான பகுதியில் உள்ள விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சிலர் எடுத்துச்சென்றனர்.

    இங்கிருந்து எடுக்கப்பட்ட மண் குவியலாக கூடுதல் விலைக்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் மண்ணுக்காக 15 அடிக்கு மேல் குளத்தை ஆழப்படுத்தியதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து மண் எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அருகில் ஓடையில் இருந்து தண்ணீர் குளத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் தற்போது ஈயான் குளத்தில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் குளத்தை யொட்டியுள்ள பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்க சில சமூக விரோதிகள் திட்டமிட்டு ஓடைக்கும், குளத்துக்கும் இடையே உள்ள பகுதியில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் பெரிய அள வில் குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளி யேற்றி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மண் போட்டு அடைப்பை சீரமைத்தனர்.

    இருப்பினும் குளத்தில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி கொண்டிருக்கி றது. குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டதில் இருந்தே இவ்வாறு அடிக்கடி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி ஜே.சி.பி. இயந்திரம் வைத்து மண் அள்ள முயற்சி நடந்த தாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் குளத்தின் கரையை கற்களால் கட்டி பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாய்-தம்பிகள் பாசப்போராட்டம் நடத்தியும் பலனளிக்கவில்லை
    • அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வெளியூரில் நர்சிங் படித்து வருகிறார்.

    இவரது தந்தை வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் 2 தம்பிகள் ஊரில் வசித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தினமும் தாயாரி டம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தி னருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் அழைத்துப் பார்த்த போது, மாணவியின் போன் சுவிட்ச் ஆப் என தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது மாணவி அங்கு இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருவட்டார் போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் கல்லூரி உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து மாணவியையும் அவரது காதலனையும் போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி, காதல னுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் மகள் போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து மாணவியின் தாயார், தனது 2 மகன்களுடன் ேபாலீஸ் நிலையம் வந்தார்.

    அவர், தனது மகளை சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். காதலனோடு செல்வதி லேயே உறுதியாக இருந்தார். மாணவியை அவரது தம்பி களும் கண்ணீர் மல்க அழை த்துப் பார்த்தனர்.

    ஒரு கட்டத்தில் 2 தம்பி களில் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இத்தனை பாசப் போராட்டங்கள் நடந்த பிறகும் மாணவியின் மனம் மாறவில்லை. அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தார்.

    • திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள விராலிகாட்டு விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தங்கதாஸ் (வயது 78), தொழிலாளி.

    இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று தங்கதாஸ் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் மதில்சுவர் மீது உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறினார்.

    உடனடியாக சுவரில் இருந்து இறங்க முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. இதனால் தங்கதாஸ், பக்கத்து வீட்டின் காம்பவுண்டிற்குள் விழுந்தார். இதில் அவரது தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் தங்க தாசின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் சுனில், பிரேம்குமார் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயத்துடன் கிடந்த தந்தையை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தங்கதாசை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    அவரது மகன் பிரேம் குமார் புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவர் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல்போனவரை தேடி வருகிறார்கள்.
    • இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே வருக்கன் பூவன்விளை, மாத்தூர், அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் (வயது 34), வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் சோபியா (25). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் கணவர் ஜாஸ்பர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது மனைவி சோபியாவை காணவில்லை. உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இதுபற்றி அக்கம்பக்கம் உள்ள வர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, காணவில்லை. இதுகுறித்து ஜாஸ்பர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து திருமணமாகி 7 நாளில் மாயமான புதுப்பெண் சோபியாவை தேடி வருகிறார்கள்.

    • தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவரம்பூர் பைற்றுவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் அணில் (வயது 26). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருவட்டாரிலிருந்து திருவரம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.கொல்வேல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    சிறிது நேரத்தில் ரோட்டோரத்திலிருந்து மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் முன் பகுதி சேதமடைந்ததுடன் அணில் தூக்கி வீசப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளை கைப்பற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிணமாக கிடந்த அணில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மராட்டிய மாநிலத்தில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
    • திருவட்டார் போலீசார் தீவிர விசாரனை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மேலவீட்டுவிளை, வடக்கநாடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53).

    இவர் மராட்டிய மாநிலத்தில் தனது அண்ணன் ஞானதாஸ் உடன் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களது தாயார் திருவட்டாரில் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ராஜேந்திரன் கடந்த 18-ந் தேதி ஊருக்கு வரும்படி இவரது மனைவி தங்கலீலா தகவல் கொடுத்தார்.

    அன்று மராட்டியத்தில் இருந்து ஊருக்கு கிளம்பியவர் இதுவரைக்கும் ஊர் வந்து சேரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை.

    இதனால் காணாமல் போன தனது கனவரை கண்டுபிடித்து தரும்படி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் செய் தார். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு தீவிர விசாரனை செய்து வருகிறார்கள்.

    • உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மங்காட்டுவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 72). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் டயாலிஸ் செய்துவந்தார் இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். இதை அவரது இளைய மகன் பார்த்து உடனே ஆற்றூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு 2 நாள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மூத்தமகன் ஷாஜி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகரை பெற்றுக்கொண்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    • குலசேகரம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி உடலை மீட்டனர்.
    • திருவட்டார் போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நெல்லி விளை புத்தன்வீடு, இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் குமாரசுவாமி. இவரது மகன் அனிக்குட்டன் (வயது 37), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. அனிக்குட்டனுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குமாரசுவாமி வெளியே சென்று பின்னர் வீட்டிற்கு வந்தபோது அனிக்குட்டனை காணவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலை யில் அனிக்குட்டன் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி அனிக்குட்டன் உடலை மீட்டனர்.

    குமாரசுவாமி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அனிக்குட்டன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இந்த சாலையில் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேரளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை நெடுஞ்சா லையில் ஏராளமான வாக னங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு புதியதாக தார் போடப்பட்டது.

    இதில் திருவட்டார் அரசு உயர்நி லைப்பள்ளி எதிரில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பார்த்து ஆய்வு செய்து அவசரகதியில் தற்காலிக மாக அந்த பகுதியை தார் போட்டு சரி செய்தனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் மீண்டும் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிர் புறமிருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டை யொட்டியுள்ள பகுதியில் இருந்து தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    "காங்கரை தேரி" எனப்ப டும் இந்த பகுதி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மேடான பகுதியாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் ஊர்ந்து ஊர்ந்து செல்லும். அதிலும் அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் சிலவேளைகளில் நகர முடி யாமல் திணறும். அவ்வாறு திணறும் லாரி உள்ளிட்ட கனரக வாகனத்தில் இருந்து சிறிய வாகனங்களில் பொருட்கள் மாற்றப்பட்ட

    பின்னரே கனரக வாக னங்கள் நகர்ந்து செல்லும். இவ்வாறு வாகனங்கள் அதிக அளவில் வரும்போது ரோட்டில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான லோடு கனிம வளங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்றுவருவதால் ரோடு பாதிப்புக்குள்ளாகிறது

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் தரப்பில் இருந்து வெடித்திருந்த சாலையின் ஒரு பகுதியில் உள்ள தார்க்கலவையை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி விட்டு புதிய தார்க்கலவை போட்டு ரோடு ரோலர் இயந்திரத்தை ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது தார்க்கலவை போடப்பட்ட இடத்திலிருந்து, சாலையில் தார்க்கலவை செட் ஆகாமல் மீண்டும் வெடிப்பு ஏற்படத்துவங்கி விரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குளாகின்றனர்.

    எனவே நெடுஞ்சா லைதுறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மே ற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பகுதி வழியாக தான் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேர ளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    இப்பகுதி ரோட்டின் இருபுறமும் நடைபாதை ரோட்டில் இருந்து 1 முதல் 2 அடி பள்ளத்தில் உள்ளதால் பொதுமக்கள் ரோட்டின் இருபுறமும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரோட்டை சரி செய்வதோடு ரோட்டின் இருபுறமும் வர்ண கற்கள் பதித்து நடைபாதை வசதி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு
    • திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள சரல்விளை அருவி க்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 37), தொழிலாளி.

    இவரது உறவினர் பாபு (50) . இவர் தக்கலை பகுதியில் அரசு டாஸ்மாக்கடையில் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் 2 பேருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்துன்று சுனிலின் வீட்டிற்குச் சென்ற பாபு தகாத வார்த்தைகள் பேசிய தோடு கையில் மறைத்து வைத்து இருந்த அரி வாளை எடுத்து சுனிலை வெட்டினார். இதில் வலது கையில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    இதனைப் பார்த்ததும் பாபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுனில் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை தேடி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது
    • தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அதிரடி நட வடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் வாகன சோதனை, கடைகளில் அதிரடி சோதனை என தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குட்டக் குழி பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திரு வட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாலிபர் கொடுத்த தகவ லின் பேரில், குட்டக்குழி பகுதியில் மறைத்து வைத்து இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வட்டவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என தெரியவந்தது.

    ×