search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கடி உடைப்பு"

    • குளத்தின் கரையை கற்களால் கட்டி பலப்படுத்த வேண்டும்
    • பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆற்றூர் குட்டக்குழி சாலையில் உள்ளது தொழிச்சல் ஈயான் குளம். சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

    சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாழ்பட்டு கிடந்த இந்த குளம் தூர்வாரப்பட்டு இரவு பகலாக மண் எடுத்து மாற்றப்பட்டது. இங்கிருந்து எடுக்கப்பட்ட மண் மற்றும் வண்டல் மண்ணை தாழ்வான பகுதியில் உள்ள விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சிலர் எடுத்துச்சென்றனர்.

    இங்கிருந்து எடுக்கப்பட்ட மண் குவியலாக கூடுதல் விலைக்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் மண்ணுக்காக 15 அடிக்கு மேல் குளத்தை ஆழப்படுத்தியதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து மண் எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அருகில் ஓடையில் இருந்து தண்ணீர் குளத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் தற்போது ஈயான் குளத்தில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் குளத்தை யொட்டியுள்ள பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்க சில சமூக விரோதிகள் திட்டமிட்டு ஓடைக்கும், குளத்துக்கும் இடையே உள்ள பகுதியில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் பெரிய அள வில் குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளி யேற்றி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மண் போட்டு அடைப்பை சீரமைத்தனர்.

    இருப்பினும் குளத்தில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி கொண்டிருக்கி றது. குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டதில் இருந்தே இவ்வாறு அடிக்கடி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி ஜே.சி.பி. இயந்திரம் வைத்து மண் அள்ள முயற்சி நடந்த தாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் குளத்தின் கரையை கற்களால் கட்டி பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×