search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு"

    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுவோரின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய மந்திரி கருத்து தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத், "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது."

     

    "சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    • தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
    • இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    மதுரை:

    தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழில் பெயர்ப்பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

    • மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆவணப் பதிவு தொடர்பான சமீபத்திய அறிவுரை குறித்த கூடுதல் விளக்கத்துடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர் முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.

    இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களின் பெயர்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரும்போது மேற்படி நிலத்தின் பிரிபடாத பாக மனைக்கான விக்கிரைய ஆவணம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்த ஆவணம் தனியாகவும் பதிவு செய்யப்படுகிறது.

    பிரிபடாத பாக மனையின் விக்கிரைய ஆவணத்திற்கு தற்போது நடைமுறையிலுள்ள அட்டவணைப்படி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கும் கட்டுமான நிறுவனத்தார்க்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுமான ஒப்பந்த ஆவணத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 1% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் 10.07.2023 முதல் 2% உயர்த்தப்பட்டு கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையானது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இது போன்ற ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் அடுக்குமாடி குடியிருப்பை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என சார்பதிவாளர்கள் வலியுறுத்தத் தேவையில்லை என்ற அறிவுரை கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த அறிவுரையை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கினர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானம் முழுவதுமாக முடிக்கப்பட்டு வழங்கப்படும் நிகழ்வுகளில்கூட அடுக்குமாடி குடியிருப்பை நேரடியாக பயனாளர்களுக்கு விற்பனைக் கிரையம் எழுதிக் கொடுத்து ஆவணப் பதிவு செய்வதற்கு பதிலாக கட்டுமானம் முடிந்த பின்னரும்கூட அதனை ஆவணத்தில் தெரிவிக்காமல் கட்டுமான ஒப்பந்த பத்திரம் மற்றும் பிரிபடாத பாக மனை விக்கிரைய பத்திரம் என்று மட்டுமே எழுதி பதிவு செய்யும் பழக்கம் 2020க்குப் பின்னர் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வந்தது.

    முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான ஆவணங்கள் 7% முத்திரைத் தீர்வை மற்றும் 2% பதிவுக்கட்டணத்தில் அரசுக்கு சேர வேண்டிய கூடுதலான 5% கட்டணம் செலுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக கிரைய பத்திரமாக பதிவு செய்யப்படாமல் 2020 அறிவுரைக்குப் பின்னர் 1% முத்திரைத் தீர்வை மற்றும் 3% பதிவுக்கட்டணம் மட்டுமே செலுத்தி கட்டுமான உடன்படிக்கை ஆவணமாக பதிவு செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

    ஆவணம் பதிவு செய்யும்போது கட்டடம் இருப்பதை ஆவணத்தில் குறிப்பிட வலியுறுத்த வேண்டாம் என கடந்த 2020ஆம் ஆண்டு சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததால் இது போன்ற நேர்வுகளில் சார்பதிவாளர்கள் கட்டடம் குறித்து கேள்வி எழுப்ப இயலாத நிலை இருந்து வந்தது.

    இவ்வாறு முழுமையாக முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து கிரையமாக வாங்காமல் கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே பதிவு செய்யும் நிலை தொடர்ந்ததால் அந்த குடியிருப்பை எதிர்காலத்தில் மறுகிரையம் செய்யும்போது பிரச்சனை எழலாம்.

    இதனைக் கருத்தில் கொண்டே ஆவணங்கள் பதிவின்போது கட்டடத்தின் கட்டுமானம் நிறைவுற்ற சான்றை வலியுறுத்த வேண்டாம் என ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதே தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பிரிபடாத பாக மனை மற்றும் குடியிருப்பு இரண்டையுமே கிரையமாக பெற்றுக் கொள்வது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில் கட்டுமான ஒப்பந்தம் செய்துகொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கெனவே உள்ள அதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களைப் பொருத்தமட்டில் கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையைப் பாவித்து பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என்று தவறாக செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமிர்தகுமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • மயிலாடுதுறையை சேர்ந்த இவர் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக இரா.சண்முகராஜன் பணி ஓய்வு பெற்றதையொட்டி புதிய மாநிலத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாநில தேர்தல் அலுவலர் அருணகிரிநாதன், துணைத்தேர்தல் அலுவலர்கள் கார்த்திகேயன், முத்து ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் திருவல்லிக்கேணி சிவ.இளங்கோ இல்லத்தில் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமிர்தகுமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமிர்தகுமாருக்கு சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சி.பி.ஐ. அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மாநிலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று ரத்து செய்துள்ளது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    இதன்மூலம் இனி தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். முன் அனுமதி பெற்ற பின்னே தமிழ்நாட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.

    ஏற்கனவே மேற்கு வங்காளம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சிபிஐ விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இள நிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது.
    • தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யபட்டுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும் புகழ்பெற்றவை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இள நிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது ஆகும்.

    தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமிராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யபட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கைரேகை வழியான வருகைப் பதிவேடு, கண்காணிப்பு கேமிராக்கள் ஆகியவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கட்டாயமாக்கி இருப்பதன் காரணத்தை நான் அறிவேன்; அது நியாய மானதும் கூட.

    ஆனால், இதுகுறித்த இந்திய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கைக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்தும் கூட, அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல... இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யபட்டுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும் புகழ்பெற்றவை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியும் மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்தவை. இந்தியாவில் மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கல்லூரிகளில் குறிப்பிடத்தக்கவை.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரிகளில் மொத்தமாக 500 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மிக எளிதாக சரி செய்து விடக் கூடிய குறைகளை காரணம் காட்டி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் அது தமிழ் நாட்டில் மருத்துவக் கல்வியை வழங்குவதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

    மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்யும்படி தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு.

    எனவே, சம்பந்தப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரி செய்து, இளநிலை மருததுவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24-ம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

    விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

    இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விஷச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
    • டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் எக்கியர்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை என்றும், விஷச் சாராயம் தான் என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம் வியப்பாகவும், நகைப்பாகவும் உள்ளது.

    கள்ளச்சாராயம் என்பதற்கு வரையறைகள் எதுவும் இல்லை. கள்ளச்சாராயம், காவல்துறை குறிப்பிடும் விஷச்சாராயம், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் அனைத்துமே உயிரிழப்பை ஏற்படுத்துபவை தான். அதற்கான கால அளவு மட்டும் தான் மாறுபடும். சட்டவிரோதமாக விற்கப்படும் சாராயம் தான் கள்ளச்சாராயம் என்றழைக்கப்படுகிறது. விஷச்சாராயம் குடித்ததால் தான் 21 உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தது காவல்துறையின் தோல்வி தான். அதற்கு பொறுப்பேற்பதை விடுத்து வினோதமான விளக்கங்களை காவல்துறை அளிக்கக் கூடாது.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு விட்டதால் தான் சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை திருடி விற்பனை செய்ததாக காவல்துறை கூறுவதும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராம், மெத்தனால் கலவை சாராயம் என அனைத்து வகை சாராயங்களும் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான். அதனால் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    • நான்கு வாரத்தில் பதிலளிக்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

    இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கள்ளச்சாராயம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதுடன், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

    • பட்டிமன்றத்தை சந்தனக்குமார் நடுவராக இருந்து நடத்தினார்.
    • விழாவை தென்காசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி தென்காசி ஐ.சி.ஐ. பள்ளியில் வைத்து நடைபெற்று வருகிறது. அதில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கம் குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    நெருங்கி வரும் தமிழக அரசின் ஈராண்டு சாதனையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தது தொழிற் புரட்சியா? சமூக நலத்திட்டங்களா? என்னும் தலைப்பில் பட்டி மன்றத்தின் நடுவராக பலபத்திர ராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனக்குமார் தலைமையில் நடைபெற்றது. தொழிற்புரட்சியே எனும் தலைப்பில் தென்காசி முதுகலை தமிழாசிரியர் காளிராஜ், சங்கரன்கோவில் பட்டதாரி ஆசிரியர் உமா ஆகியோரும் சமூக நலத்திட்டங்களே எனும் தலைப்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பிச்சையம்மாள். சங்கரன்கோவில் வையாபுரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மாரிமுத்து ஆகியோரும் பட்டிமன்ற சிறப்புரை ஆற்றினார்கள்.

    விழாவினை தென்காசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தென்காசி வட்டார நூலகர் பிரம நாயகம், கிளை நூலகர் சுந்தர், மகேஷ் கிருஷ்ணன் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் பட்டிமன்றத்தில் பேச்சாளராக கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • புதிய நிர்வாகிகள் தேர்வு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மரகதலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகன் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில தலைவர் சரவணனுடைய பணிநீக்கத்தை ரத்து செய்து பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் ஒன்றிணைப்பு மாநில அமைப்பு செயலாளர் சுவாமிநாதன் பேசினார்.தொடர்ந்து வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக அந்தோனியும், மாவட்ட செயல் தலைவராக முருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் நமசிவாயம், பூரணம், சுந்தர்ராஜ், நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

    • காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
    • பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்படடுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

    மேலும், திரும்பப் பெறும் பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

    கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேணடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×