என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.பி.ஐ. விசாரணைக்கான முன் அனுமதியை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு
- தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் சி.பி.ஐ. அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மாநிலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று ரத்து செய்துள்ளது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதன்மூலம் இனி தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். முன் அனுமதி பெற்ற பின்னே தமிழ்நாட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.
ஏற்கனவே மேற்கு வங்காளம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சிபிஐ விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






