search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்குழு கூட்டம்"

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பிரகாஷ்பாபு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச்செயலாளர் சோமசுந்தர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார். வரவு-செலவு அறிக்கை குறித்து மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
    • ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர பாஜக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி சாலை சீரமைக்க வேண்டும். ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் நந்தன் மாவட்ட செயலாளர் கோட்டி நகரப் பொதுச் செயலாளர் ரமேஷ் கோகுல் பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிட கேட்டுக் கொண்டார்.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், அடிலம் அன்பழகன், நகர செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்று கட்சி செயல்பாடுகள் உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார்.

    தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதிலும் ஒன்றியம் நகரம் கிளை வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும், கலைஞரின் சிலை அனுமதி பெற்று அனைத்து கிராம பகுதிகளிலும் வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிட கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, கீரை விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், செங்கண்ணன், ரத்தினவேல் சிவப்பிரகாசம், சந்திரமோகன், வேடம்மாள் சௌந்தரராஜன், சரவணன், பேரூர் செயலாளர்கள் முரளி, வெங்கடேசன், மோகன், கௌதமன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. திருப்–பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதிய உறுப்பினர் சேர்க்கை பணி குறித்தும், கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறை–யில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வருகிற 30-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிமையை பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை செயலாளர்கள் குமார், நந்–தினி, சேகர், பொருளாளர் சாமிநாதன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை பொதுக்–குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • சென்னையில் 15-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
    • தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் தமிழ்நாடு ஊாட்சி செயலாளர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யும் விதமாக பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது பணியாளர்கள் மத்தி யில் மிகுந்த வர வேற்பையும் பாராட்டையும் பெற்று வரு கிறது.

    காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்போது படித்த ஏழை மாணவர்கள் அரசு பணிக்கு வரும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது தவிர ஜாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுகள் மூலம் சமூகநீதி நிலை நாட்டப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் தான் ஊரக வளர்ச்சி துறையில் மகத்தான 2 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சட்ட திருத்தத்தின் மூலமும், ஒரு விதி திருத்தத்தின் மூலமும் ஊராட்சி செயலர் பணியி டங்கள் இனி வருங்காலங் களில் அரசு அலுவலரால் கட்டுப்படுத்தப்படும்.அதற்குரிய பணி விதிகள் அரசாணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    எனவே முதல்- அமைச்சரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் அந்த பணி விதிகள் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டி எங்கள் அமைப்பின் சார்பில் வருகிற 15-ந்தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது மேலும் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதி களாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தையும் கொடுத்து, அவருக்கு கீழ் ஒரு அரசு அலுவலரை நியமிக்கும் அல்லது தண்டிக்கும் அதிகாரத் தையும் கொடுத்தால் எவ்வ ளவு பெரிய நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    கோடிக்கணக்கில் நிதி கையாளக்கூடிய கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் வலுவான தாக அரசு அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இருந்தால் மட்டுமே நிதி கையாளுகை சிறப்பாக இருக்கும். காலமுறை ஊதியம் பெறும் பணியா ளர்களின் பணி நியமனம் அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட விதி திருத்தலின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படும் போது இளைஞர்களும், படித்து வேலையற்ற பட்ட தாரிகளும் பொதுப்போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வழிவகுக்கும். இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம பகுதிகள் தோறும் கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும்.
    • தூய தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கிழக்கு பா.ம.க. செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் அரசாங்கம் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் பி.வி செந்தில், பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் மாது, மாநில செயற்குழு உறுப்பினர் கனல் ராமலிங்கம், மாதவன், வணங்காமுடி, சேட்டு, சிவகுமார், மதியழகன், ஆகியோர் விளக்கிபேசினர்.

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழை தேடி பயணத்தில் ஒரு அங்கமாக நகரம், கிராம பகுதிகள் தோறும் கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும்.

    தூய தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கதுண்டு பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதை நிர்வாகிகள் நிறைவேற்றிட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் நாகேஸ்வரி, சரவணன், முத்துசாமி, ஈஸ்வரன் ,ஜெயகுமார், சங்கர், முருகேசன், மஞ்சுளா,அருண், சின்னராஜ், முருகன், பூமணி, வெங்கட்டேசன் நாயுடு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஒன்றிய, நகர, முத்தூர் பேரூர் கழக தி.மு.க. செயற்குழு கூட்டம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமாராணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும்ஆலோசி க்கப்பட்டது.இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன்,நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர்செயலாளர் செண்பகம் பாலு மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணை ப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.
    • கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழையப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    ஜனதா நிர்வாகிகள் தீவிர உறுப்பினர் சேர்க் கையில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழையப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும், ஆர்.சி பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெங்களூரு சாலையை டாக்டர். அம்பேத்கர் சாலை என மாற்ற வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகமாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலா ளர்கள் மீசை அர்சுணன், கோவிந்தராஜ், பட்டியல் அணி பார்வை யாளர் திருமலைபெருமாள், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
    • பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் - தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.

    ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு, முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து விரிவாக பேசினார். மேலும், பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    மேலும்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளர்கள் ஆரணி அன்புவாணன், வேலூர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் இன்பசேகரன், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
    • இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    திருப்பூர்

    தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட காங்கயம் தொகுதி பொறுப்பாளர் உமாராணி, மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் சித்–திக், தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை வரும் ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தொண்டர்கள் தங்கள் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு செய்ததற்கு விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பட்ஜெட்டில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் திட்டம் தொடங்கப்படும் என்று அறி–வித்த முதல்-அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது.
    • பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

    கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், சடடமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செல்வராஜ், மணி, அன்வர்கான், மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது. மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகவும், எழுச்சியோடும் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதிக்குள் வீடுதோறும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கிளை, வட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பாகங்களுக்கு உடனடியாக பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கலைஞர் சமாதியில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் சேனைத்தலைவர் மண்டபத்தில் நடந்தது.தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வாசுதேவநல்லூர் முருகன் வரவேற்றார்.

    சென்னை உயர்நீதிமன்ற தீர்மானத்தின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரை கலைஞர் சமாதியில் காத்திருக்கும் போராட்டத்தினை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி ராமசுப்பு, நெல்லை சங்கர், தென்காசி மாவட்ட பொரு ளாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், செங்கோட்டை பண்டார சிவன், கடையநல்லூர் ராஜேந்திரன், சங்கரன்கோவில் மாரியப்பன், தென்காசி முத்துக்குமார், அந்தோணி செல்லத்துரைச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

    ×