search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Working Committee Meeting"

    • சென்னையில் 15-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
    • தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் தமிழ்நாடு ஊாட்சி செயலாளர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யும் விதமாக பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது பணியாளர்கள் மத்தி யில் மிகுந்த வர வேற்பையும் பாராட்டையும் பெற்று வரு கிறது.

    காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்போது படித்த ஏழை மாணவர்கள் அரசு பணிக்கு வரும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது தவிர ஜாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுகள் மூலம் சமூகநீதி நிலை நாட்டப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் தான் ஊரக வளர்ச்சி துறையில் மகத்தான 2 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சட்ட திருத்தத்தின் மூலமும், ஒரு விதி திருத்தத்தின் மூலமும் ஊராட்சி செயலர் பணியி டங்கள் இனி வருங்காலங் களில் அரசு அலுவலரால் கட்டுப்படுத்தப்படும்.அதற்குரிய பணி விதிகள் அரசாணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    எனவே முதல்- அமைச்சரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் அந்த பணி விதிகள் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டி எங்கள் அமைப்பின் சார்பில் வருகிற 15-ந்தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது மேலும் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதி களாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தையும் கொடுத்து, அவருக்கு கீழ் ஒரு அரசு அலுவலரை நியமிக்கும் அல்லது தண்டிக்கும் அதிகாரத் தையும் கொடுத்தால் எவ்வ ளவு பெரிய நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    கோடிக்கணக்கில் நிதி கையாளக்கூடிய கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் வலுவான தாக அரசு அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இருந்தால் மட்டுமே நிதி கையாளுகை சிறப்பாக இருக்கும். காலமுறை ஊதியம் பெறும் பணியா ளர்களின் பணி நியமனம் அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட விதி திருத்தலின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படும் போது இளைஞர்களும், படித்து வேலையற்ற பட்ட தாரிகளும் பொதுப்போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வழிவகுக்கும். இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 48-வது செயற்குழு கூட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. கல்லூரியில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொண்டனர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 48-வது செயற்குழு கூட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. கல்லூரியில் பிரதமப் பேராயரின் ஆணையாளர் தீமோத்தியூ ரவீந்திரர் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக பொறியியல் கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தில் காலை 10 மணி அளவில் செயற்குழு உறுப்பினர்களுக்கான திருவிருந்து ஆராதனை திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் உப தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பிரதமப்பேராயரின் ஆணையாளர் தீமோத்தியூ ரவீந்திரர் செய்தி அளித்து திருவிருந்து பகிர்ந்தளித்தார். தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்ட 47-வது நடவடிக்கைகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் திருமண்டல நிலைவரக் குழு கூட்டங்களில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை திரு மண்டல காரியதரிசி நீகர் பிரின்ஸ் கிப்சன் செய்திருந்தார். குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் நன்றி கூறினார். ஜாண் தாமஸ் சபை மன்ற தலைவர் நவராஜ் இறுதி ஜெபம் செய்தார்.பிரதமப் பேராயரின் ஆணையாளர் ஆசீர்வாதம் கூறி கூட்டத்தை முடித்தார்.

    ×