என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 48-வது செயற்குழு கூட்டம்
- தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 48-வது செயற்குழு கூட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. கல்லூரியில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொண்டனர்.
நாசரேத்:
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 48-வது செயற்குழு கூட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. கல்லூரியில் பிரதமப் பேராயரின் ஆணையாளர் தீமோத்தியூ ரவீந்திரர் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக பொறியியல் கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தில் காலை 10 மணி அளவில் செயற்குழு உறுப்பினர்களுக்கான திருவிருந்து ஆராதனை திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் உப தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பிரதமப்பேராயரின் ஆணையாளர் தீமோத்தியூ ரவீந்திரர் செய்தி அளித்து திருவிருந்து பகிர்ந்தளித்தார். தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்ட 47-வது நடவடிக்கைகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் திருமண்டல நிலைவரக் குழு கூட்டங்களில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை திரு மண்டல காரியதரிசி நீகர் பிரின்ஸ் கிப்சன் செய்திருந்தார். குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் நன்றி கூறினார். ஜாண் தாமஸ் சபை மன்ற தலைவர் நவராஜ் இறுதி ஜெபம் செய்தார்.பிரதமப் பேராயரின் ஆணையாளர் ஆசீர்வாதம் கூறி கூட்டத்தை முடித்தார்.






