search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்வரிசை"

    • மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் அரைக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து கடந்த2 ம் தேதி சந்தனக்கூடு விழாவும், 3:ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.

    இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெற்றது. இந்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழம், இனிப்பு மலர்களை பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் தாம்பூலத்தில் வைத்து மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அவர்களை அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது என்றும் துவா ஓதப்பட்டது. நாகூர் ஆண்டவர் காலடியில் மலர்கள் தூவி ஆயிரந்தோனி என மீனவ மக்கள் பிரார்தனை செய்தனர்.

    இது குறித்து நாகூர் தர்கா நிர்வாகி கூறும் போது நாகூர் ஆண்டவரை முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்து அரவணைத்தது மீனவ மக்கள் என்றும் அதனை போற்றும் விதமாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெறுவதாக தெரிவித்தார். நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இருந்தது அனைவரும் மத்தியிலும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கர்ப்பிணிகளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றி யக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கி ணைப்பாளர் பரணிகா அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன், அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருள்களுடன் ஐந்து வகையான உணவுகள் பறிமாறப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா, மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், ஒப்பந்ததாரர் சண் சரவணன் மற்றும் ஏராளமான பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அருள் மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடை பெற்றது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு குலசேகர விநாயகர் ஆலயத்தில் இருந்து 91 தட்டுகளில் பழங்கள், இனிப்பு, பலகாரங்கள், முறுக்கு, தேங்காய் வைத்து திருக்கல்யாண சீர்வரிசைச் சுருள் கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வல மாக எடுத்து வந்தனர்.

    பின்னர் 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 16-ஆம் நாளான இன்று சனிக்கிழ மை மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பும், இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவடையும் நடக்கிறது. 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கே.எஸ். மணி, எஸ். கருணாகரன், ராேஜந்தர பாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கணக்கர் ராஜ சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு.
    • அங்கன்வாடிக்கு தேவையான உபகரண பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா , அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.

    விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார்.

    திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கொக்காலடி, முள்ளூர், திருத்துறைப்பூண்டி டவுன் பள்ளிவாசல் ஆகிய அங்கன்வாடி மையங்க ளுக்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் உதவியா ளர்களை பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து அங்க ன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக மேளதாள இன்னிசையுடன் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கி ல்லி வளவன், அங்கன்வாடி மைய பார்வை யா ளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பெ ற்றோ ர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.

    • 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
    • கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ பவுலின் கலந்து கொண்டு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கி கர்ப்பக் காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவா்புகழேந்தி, வர்த்தக சங்க தலைவா் தென்னரசு , தி.மு.க வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் முருகையன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சித்ரா வரவேற்று நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

    • கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமையில், வட்டார திட்ட அலுவலர் கண்ணகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா முன்னிலையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாரிமுத்து எம்.எல்.ஏ கர்ப்பிணி பெண்கள் நலத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

    ெதாடர்ந்து, செல்வராசு எம்.பி கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், பேரீட்சை பழங்கள் உள்பட 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசும்போது, குழந்தையின் வளர்ச்சியானது கருவுற்ற திலிருந்து தொடங்குகிறது, தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமாக பிறக்கும். தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.

    மேலும், வட்டார மருத்துவ அலுவலர் கௌரி கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊட்டசத்து கண்காட்சி நடைப்பெற்றது, கர்ப்பிணிகளுக்கு புளிசாதம், காய்கறி சாதம், புலவு, லெமன் சாதம், வடை, தயிர்சாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்த்தி, ஊராட்சி தலை வர்கள் வீரசேகரன், ஜானகிராமன், மாலினி ரவிச்சந்திரன், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஊட்டசத்து ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன், உதவியாளர் மேனகா, சூபர்வைசர்கள் கமலா, காயத்ரிதேவி, ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் பூ, பழம், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
    • தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலையில் கணபதிஹோமம், லெட்சுமிஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பெண்கள் பூ புஷ்பம், பழ வகைககள், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோயில் வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    • அம்மனுக்கு உரல் உலக்கை சத்தம் பிடிக்காத காரணத்தினால் அம்மன் கோபித்துக்கொண்டு வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டதாக ஐதீகம்.
    • திருவிழா முடிந்த பின்பு மீண்டும் அம்மனை பெட்டியில் வைத்து சீர்வரிசை தட்டுகளுடன் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்று வைத்து விடுவது வழக்கம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புனவாசல் கிராமத்தில் வடகட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். 2 வருடங்கள் கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஒரு மாதம் கடந்து இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த வடகட்டளை மாரியம்மன் கோவிலில் அம்மனை வருடத்திற்கு ஒரு முறை தலையில் சுமந்து எடுத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த கோவிலில் இருந்த அம்மனுக்கு உரல் உலக்கை சத்தம் பிடிக்காத காரணத்தினால் இந்த அம்மன் கோபித்து க்கொண்டு வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்றுவிட்டதாக ஐதீகம். இதன் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை ஐம்பொன்னாலான ஒன்றரை அடி நீளமுள்ள இந்த வட கட்டளை மாரியம்மன் சிலையை வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இருந்து மரப்பெட்டியில் வைத்து மாலை அணிவித்து தலையில் சுமந்தபடி 8 கிலோமீட்டர் தூரம் குறுக்குவழியில் புனவாசல் கிராம மக்கள் இந்த அம்மனை எடுத்து வருவது வழக்கம்.

    இந்த வட கட்டளை மாரியம்மனின் பிறந்த ஊர் புனவாசல் என்று கருதப்படுவதால் கிராம மக்கள் மணப்பெண்ணுக்கு சீர்வரிசை எடுத்து வருவது போன்று பூ, பழம், தேங்காய் என சீர்வரிசை தட்டுகளுடன் இந்த அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்து வடகட்டளை மாரியம்மன் ஆலயத்தில் வைத்து 10 நாட்கள் திருவிழா நடத்துகின்றனர்.இந்த வருடம் மேட்டூர் அணையில் தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்ட காரணத்தினால் அம்மனை கார் மூலம் எடுத்து வந்து ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக தலையில் சுமந்து வந்தனர்.10 நாட்கள் திருவிழா முடிந்த பின்பு மீண்டும் அம்மனை பெட்டியில் வைத்து சீர்வரிசை தட்டுகளுடன் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்று வைத்து விடுவது வழக்கம்.

    இந்த திருவிழாவில் புனவாசல் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தலையில் சுமந்து வந்து வழிபாடு நடத்தினர். திருவிழா முடிந்தபின் மீண்டும் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்று விடுவதால் அடுத்த ஒரு வருடம் வரை புனவாசல் வடகட்டளை மாரியம்மன் கோவில் அம்மன் இல்லாத கோவிலாக இருக்கும்.மீண்டும் அடுத்த வருடம் இதே போன்று விழா நடத்தப்படும் என்றும் அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். இந்த வினோதமான திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×