search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் தர்காவில் 400 ஆண்டுகளாக தொடரும் மத நல்லிணக்க நிகழ்ச்சி
    X

    நாகூர் தர்காவில் மீனவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனை செய்தனர்.

    நாகூர் தர்காவில் 400 ஆண்டுகளாக தொடரும் மத நல்லிணக்க நிகழ்ச்சி

    • மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் அரைக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து கடந்த2 ம் தேதி சந்தனக்கூடு விழாவும், 3:ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.

    இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெற்றது. இந்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழம், இனிப்பு மலர்களை பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் தாம்பூலத்தில் வைத்து மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அவர்களை அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது என்றும் துவா ஓதப்பட்டது. நாகூர் ஆண்டவர் காலடியில் மலர்கள் தூவி ஆயிரந்தோனி என மீனவ மக்கள் பிரார்தனை செய்தனர்.

    இது குறித்து நாகூர் தர்கா நிர்வாகி கூறும் போது நாகூர் ஆண்டவரை முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்து அரவணைத்தது மீனவ மக்கள் என்றும் அதனை போற்றும் விதமாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெறுவதாக தெரிவித்தார். நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இருந்தது அனைவரும் மத்தியிலும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×