search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கல்யாண விழா"

    • பாலக்கோடு சினிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கம்மாளர் தெருவில் உள்ள கரிவரத ராஜா பெருமாள் கோவிலில் இன்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ திருவிழா நடைப்பெற்றது. இதனையடுத்து விக்கிரகத்திற்க்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏராளனமான பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

    அதனை தொடர்ந்து ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மங்கள இசை முழங்க திருக்கல்யாணம் நடந்தேறியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமணம் ஆகாத கன்னி பெண்கள், இளைஞர்கள் சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சுவாமிக்கு மொய் பணம் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • மாசிமகத் தேர்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • அச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மனை அழைத்து வந்தனர்.

    இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து மூலவருக்கு திருமஞ்சனம் பூஜை செய்யப்பட்டது. பின்பு திருமணக் கோலத்தில் உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மண்டபத்துக்கு எழுந்தளினார்.

    அச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன. புண்ணிய வாகம் முடிந்த பின் அரங்கநாத பெருமாளுக்கு பூணூல் அணிவித்து கங்கணம் கட்டி குலம் வாசிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி வேதவியாச பட்டர் ஆகியோர் மஞ்சள் இடித்து மாங்கல்யா பூஜைக்கு கொடுத்தனர்.

    அரங்கநாதர் சார்பில் அர்ச்சர்கள் திருமாங்கல்யத்தை ஸ்ரீதேவி, பூதேவிக்கு அணிவித்தனர்.

    பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில் மஞ்சள், தாலி கயிறு ஆகியவை வழங்கப்பட்டன.

    நாளை அதிகாலை 5.30 மணிக்கு அரங்கநாத பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தளினார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், காரமடை தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஷ், காரமடை தாச பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் விக்னேஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அருள் மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடை பெற்றது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு குலசேகர விநாயகர் ஆலயத்தில் இருந்து 91 தட்டுகளில் பழங்கள், இனிப்பு, பலகாரங்கள், முறுக்கு, தேங்காய் வைத்து திருக்கல்யாண சீர்வரிசைச் சுருள் கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வல மாக எடுத்து வந்தனர்.

    பின்னர் 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 16-ஆம் நாளான இன்று சனிக்கிழ மை மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பும், இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவடையும் நடக்கிறது. 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கே.எஸ். மணி, எஸ். கருணாகரன், ராேஜந்தர பாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கணக்கர் ராஜ சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கல்யாண காமாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகர் கோட்டை கோவில் அருள் தரும் அன்னை கல்யாண காமாட்சி அம்பிகை கோவிலில் கார்த்திகை சதய திருநாளை முன்னிட்டு சிவசக்தி ஐக்கிய நிலையில் திருக்காட்சியாக கல்யாண காமாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெற்றது.

    தருமபுரி கோட்டை கோவில் ஸ்ரீ கல்யாண காமாட்சி கோவிலில் புதன்கிழமை மாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கல்யாண காமாட்சி, மல்லிகார்ஜூன சுவாமி, திருமேனிகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் கல்யாண காமாட்சி திருக்கல்யாண வைபவ விழா சிறப்புற நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நிகழ்வின் நிறைவாக மஞ்சள், குங்குமம், திருமாங்கல் சரடு, வளையல், சௌபாக்கிய பொருட்கள் மற்றும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது.

    ×