சமுதாய வளைகாப்பு விழா

கர்ப்பிணிகளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
Published on

அம்மாபேட்டை:

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

அம்மாபேட்டை ஒன்றி யக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கி ணைப்பாளர் பரணிகா அனைவரையும் வரவேற்றார்.

ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன், அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

இதில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருள்களுடன் ஐந்து வகையான உணவுகள் பறிமாறப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா, மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், ஒப்பந்ததாரர் சண் சரவணன் மற்றும் ஏராளமான பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com