என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுவாமி- அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மச்சபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம்
- பெண்கள் பூ, பழம், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
- தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலையில் கணபதிஹோமம், லெட்சுமிஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பெண்கள் பூ புஷ்பம், பழ வகைககள், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோயில் வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.






