search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திர கிரகணம்"

    • இந்தியாவில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னதாக கிரகணம் தோன்றுவதால் அதனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு குறைவு.
    • நெல்லையில் உள்ள கோவில்களில் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    நெல்லை:

    சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. பொதுவாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்தியாவில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னதாக கிரகணம் தோன்றுவதால் அதனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு குறைவு.

    சிறப்பு ஏற்பாடு

    எனினும் கிரகணம் முடிந்த பின்னரும் இரவு 7 மணி வரை சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும் காட்சியை பார்க்கலாம். கிரகணத்தையொட்டி பொதுமக்கள் பார்க்கும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக அறிவியல் மையத்தில் டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு பைனாகுலார் உள்ளிட்ட தொலைநோக்கி கருவிகள் மூலம் சந்திர கிரகணத்தை காணலாம் என அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

    கோவில் நடை அடைப்பு

    இந்நிலையில் சந்திர கிரகணத்தையொட்டி நெல்லையில் உள்ள கோவில்களில் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனால் மாலையில் கோவில் நடைகள் திறக்கப்படாது. டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு முன்னதாக அன்னா பிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கோவில் உள் தெப்பத்தில் சிறப்பு தீர்த்தவாரி நடத்தப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    • செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும்.
    • கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

    காங்கேயம் :

    சந்திர கிரகணத்தையொ ட்டி, காங்கயம் சிவன்மலை முருகன் கோயிலில் செவ்வா ய்க்கிழமை (நவம்பா் 8) நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணம் இன்று நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வா ய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை காலை வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று சந்திர கிரகணம் நடக்கிறது.
    • திருப்பத்தூரில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை காலை 6 மணி்க்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் சந்திரகிரகணம் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு நடை திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணிவரை நிகழ்கிறது. அதையொட்டி இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன.

    அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு கைங்கர்யம், நிவேதனம் முடிந்ததும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலேஸ்வரர் கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் மூடப்படுகின்றன. முன்னதாக துணைக் கோவில்களில் காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம்.

    சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து கைங்கர்யங்கள் நடக்கும். இதைப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சந்திர கிரகணத்தையொட்டிராமேசுவரம் கோவிலில் இன்று பகல் நடை அடைக்கப்படும்.
    • இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்

    சந்திர கிரகணத்தை ஒட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.

    ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் வழக்கமான கால பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதனை யடுத்து வழக்கம்போல் பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் நடை மாலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு அர்த்த ஜாம பூஜைகள் நடந்த பிறகு நடை அடைக்கப்படும்.

    சந்திர கிரகணத்தையொட்டி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரிக்கு செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வலம் வந்து கோவிலுக்கு 7 மணிக்கு சென்றடையும். கோவிலில் சந்திர கிரகண பூஜைகள் நடைபெற்ற பின் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
    • பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    முருகன்கோவில்களில் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது.

    சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

    ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போதும், கோவில் நடை திறந்து பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி முருகன் கோவிலில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    கிரகணத்தை யொட்டி, பரிகார பூஜைகள் முன் கூட்டியே நடத்தப்படுவதால் சூரிய, சந்திர கிரகணத்தின் போது, நடை அடைக்கப்படுவதில்லை என்று கோவில் நிா்வாகத்தினர் தெரிவித்தனர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய ‌‌வீரராகவ பெருமாள் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிற்பகல் 12 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    பின்னர் மீண்டும் நாளை (9-ந்தேதி) காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • சந்திர கிரகணம் இன்று நடக்கிறது.
    • 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவிலில் பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு, நடையும் சாத்தப்பட்டு இருக்கும். மேலும் இன்று காலை 7 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் 4.30 மணிக்கு மத்திம காலத்தில் தீர்த்தம் கொடுக்கப்படும். அதை தொடர்ந்து சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடந்து இரவு 7 மணிக்கு அர்த்தசாமபூஜை நடைபெறும். பின்னர் 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சந்திரகிரகணம் இன்று மதியம் 2.39 மணியிலிருந்துரு மாலை 6.19 மணி வரை நடக்கிறது.
    • கோவில் நடை மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை சாத்தப்படுகிறது.

    இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திரகிரகணம் ஏற்படுவதால் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடை சாத்தப்படுகிறது.

    தொடர்ந்து பரிகார பூஜைகள் நடைபெற்ற உடன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • இன்று மாலை 5:32 மணி முதல் 6:18 வரை சந்திர கிரகணம் நடைபெறவிருக்கிறது.
    • ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

    அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும் உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நவகிரகங்களில் உள்ள ராகு சந்திரன் இருவருக்கும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெள்ளை நிற வஸ்திரம், நெல், வெற்றிலை பாக்கு வைத்து யாருக்கேனும் தானம் கொடுக்க வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கூட இந்த தானத்தை செய்யலாம். இதை சந்திர ப்ரீத்தி பரிகாரம் என்று சொல்லுவார்கள்.

    கிரகண நேரத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: மேஷ ராசியில் உள்ள பெண்கள் கிரகண நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அதே சமயம் கிரகண நேரத்தின் போது உங்களுடைய மனதிற்குள் ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை ஜெபமாக சொல்லுங்கள். சிம்ம ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மீன ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், கவனமாக இருக்க வேண்டும்.

    வெளியில் செல்ல கூடாத ராசி: குறிப்பாக மகர ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. கூடுமானவரை வெளியிடங்களுக்கு பிரயாணம் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே உங்களுக்கு வெளியில் பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ராமஜபம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் நாராயணனின் பேரை உச்சரிக்கலாம். அல்லது 'ஓம் நமசிவாய' மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

    கிரகண நேரத்தின்போது கூடுமானவரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாதீங்க. வெளியிடங்களில் பெரியவர்கள் இருப்பதை கூட தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் எந்த பிரச்சனையிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைவருமே அவரவர் வீட்டில் இருந்தபடி அவரவருக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளின் பாதிப்பு குறையும்.

    • பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது.
    • நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும்.

    சென்னை:

    வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சவுந்தர ராஜ பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது. நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும். அப்போது நிலவின் ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம்.

    சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும்.

    பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம். சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது.

    இதில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணிவரை நிகழும்.

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை 5.38 மணிக்கு தான் சந்திரன் உதயமாகிறது. எனவே முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணிவரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

    மேலும் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தான் தமிழகத்தில் காண முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.
    • மதியம் 1.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    திருச்செந்தூர் :

    சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு கோவில்களில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.

    அதேபோல் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மதியம் 1.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.

    • நம் உடலில் இருக்கின்ற நீர் சக்தி மற்றும் வெப்ப சக்தி இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது.
    • அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும்.

    சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ன செய்யும் ?

    நமது உடலுக்கு ஆதார சக்தியாக சூரியனும், இயக்க சக்தியாக சந்திரனும் இருக்கிறார்கள்.

    அறிவியல் உலகம், சூரியனுடைய தன்மையை வெப்ப சக்தி, விட்டமின் டி எனவும், சந்திரனுடைய தன்மையை நீர்சக்தி, நீர்ச்சத்து எனவும் கூறுகிறது.

    வான் வெளியில் இருக்கும் சூரியனும் சந்திரனும் நம் உடலில் வெப்ப சக்தியாக நீர் சக்தியாக இருக்கிறார்கள்.

    இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.

    இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

    வான் வெளியில் சூரிய சந்திர சக்தியின் வெளிப்பாடு மாறும்போது நமது உடலில் அவை எதிரொலிக்கும்.

    நம் உடலில் இருக்கின்ற நீர் சக்தி மற்றும் வெப்ப சக்தி இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது. அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும். இவர்களுக்கு கிரகங்களினால் பாதிப்பு நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    நன்றாக கவனியுங்கள்... நிச்சயம் நேரும் என்பதல்ல நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதற்காகவே கிரகண நேரங்களில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என நமது பெரியவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    -சிவ. இராம. கணேசன்

    ×