search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் மையம்"

    • தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கான நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்கப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
    • வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை புது ஜெயில் ரோட்டில் கரிமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் மதுரை மாநகருக்குள் அதிகாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் அங்கிருந்த கட்டடங்கள் சிதிலமடையத் தொடங்கின. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாகவும் கரிமேடு மீன் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, மலர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநகருக்குள் லோடு வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த பழைய கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து நகரின் முக்கிய பகுதியில் மத்திய மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 20 ஆயிரம் சதுர அடி காலி இடம் உள்ளது.

    கடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்த காலி இடம் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து பேசிய 58-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயராமன் அந்த இடத்தை பொதுமக்கள் நலனுக்கு பயன்படுத்துவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த மேயர் இந்திராணி அந்த இடத்தில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தனியார் நிறுவன பங்களிப்புடன் பழைய கரிமேடு மார்க்கெட் காலி இடத்தின் ஒரு பகுதியில் அறிவியல் மையம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மையத்தில் மாணவர்கள் அறிவியல் பயன்பாடுகளை செய்முறையில் கற்று தெரிந்து கொள்ள உதவும் நவீன உபகரணங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ரோபாட்டிக் தொழில்நுட்ம் ஆகியவற்றுக்கு தனித்தனி ஆய்வகங்கள், நேரடி செய்முறை சாதனங்கள் ஆகியவை அமைக்கப்படும் பார்வையிடுவது, அங்கு உள்ள சாதனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக நேரடியாக அறிவியல் கூறுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும் நூலகம், கருத்தரங்கம், வாசிப்பறை, நவீன கற்றுணர் வகுப்பறை களும் அமைக்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த மையம் இருக்கும் என்றார்.

    கோவிட் தொற்று காலத்தில் கரிமேடு மீன் மார்க்கெட்டை அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முதலில் திட்டமிடப்

    பட்டிருந்த தாகவும், ஆனால் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் நகருக்குள் அதிகாலையில் லோடு வாகனங்களின் போக்குவரத்து ஓரளவு குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • பழைய ராக்கெட்டுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
    • காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் அதிக நாட்கள் இங்கு தங்கி இருந்து சுற்றுலா தலங் களை கண்டுகளிப்பதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    அந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை தெரிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசின் விண்வெளி துறை சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.150 கோடி செலவில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த விண்வெளி பூங்காவில் இந்திய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகளான ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் மற்றும் அறிவியல் கண்காட்சிகள் சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இடம் பெற உள்ளன. மேலும் பழைய ராக்கெட்டுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

    இந்த விண்வெளி அறிவியல் மற்றம் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணியின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்த விண்வெளி பூங்கா அமைய இருக்கும் இடத்தை சுற்றி பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

    • 18-ந் தேதி `எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு’ என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெறுகிறது.
    • 21-ந் தேதி பொது மக்களுக்கான திறந்த வெளிப்போட்டி நடைபெற உள்ளது.

    நெல்லை:

    சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை மறுநாள் (18-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.

    18-ந் தேதி `எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சியும், 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு 6 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு `அருங்காட்சியக ஓவியத்தில் வர்ணம் தீட்டுதல்' போட்டியும் நடத்தப்படு கிறது.

    அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு `அருங்காட்சியங்களின் வரலாறு' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான பணிமனையும், 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு பொது மக்களுக்கான `அருங்காட்சி யங்களையும் அதன் இடங்களையும் சரியாகப் பொருத்துதல் ' என்ற திறந்த வெளிப்போட்டியும், மாலை 3.30 மணிக்கு நிறைவு விழாவும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். எனவே நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தகுதியுடையவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட அறிவியல் மையம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணையோ sciencecentrenellaiednprog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரி எஸ்.எம்.குமார் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னதாக கிரகணம் தோன்றுவதால் அதனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு குறைவு.
    • நெல்லையில் உள்ள கோவில்களில் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    நெல்லை:

    சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. பொதுவாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்தியாவில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னதாக கிரகணம் தோன்றுவதால் அதனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு குறைவு.

    சிறப்பு ஏற்பாடு

    எனினும் கிரகணம் முடிந்த பின்னரும் இரவு 7 மணி வரை சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும் காட்சியை பார்க்கலாம். கிரகணத்தையொட்டி பொதுமக்கள் பார்க்கும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக அறிவியல் மையத்தில் டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு பைனாகுலார் உள்ளிட்ட தொலைநோக்கி கருவிகள் மூலம் சந்திர கிரகணத்தை காணலாம் என அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

    கோவில் நடை அடைப்பு

    இந்நிலையில் சந்திர கிரகணத்தையொட்டி நெல்லையில் உள்ள கோவில்களில் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனால் மாலையில் கோவில் நடைகள் திறக்கப்படாது. டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு முன்னதாக அன்னா பிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கோவில் உள் தெப்பத்தில் சிறப்பு தீர்த்தவாரி நடத்தப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    • கட்டுரைப் போட்டியில் தென்காசி, நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் சர்வின் தனிஷ்கர் 2-ம் இடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

    தென்காசி:

    நெல்லை அறிவியல் மையத்தில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. தென்காசி, நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 'அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கட்டுரைப் போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் சர்வின் தனிஷ்கர் 2-ம் இடம் பெற்றுச் சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சான்றிதழ், வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் சாதனை படைத்த மாணவர் சர்வின் தனிஷ்கரைப் பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    ×