search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கான நவீன கற்றுணர் அறிவியல் மையம்-மேயர் இந்திராணி பொன்வசந்த் தகவல்
    X

    மேயர் இந்திராணி பொன்வசந்த்

    தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கான நவீன கற்றுணர் அறிவியல் மையம்-மேயர் இந்திராணி பொன்வசந்த் தகவல்

    • தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கான நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்கப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
    • வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை புது ஜெயில் ரோட்டில் கரிமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் மதுரை மாநகருக்குள் அதிகாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் அங்கிருந்த கட்டடங்கள் சிதிலமடையத் தொடங்கின. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாகவும் கரிமேடு மீன் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, மலர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநகருக்குள் லோடு வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த பழைய கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து நகரின் முக்கிய பகுதியில் மத்திய மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 20 ஆயிரம் சதுர அடி காலி இடம் உள்ளது.

    கடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்த காலி இடம் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து பேசிய 58-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயராமன் அந்த இடத்தை பொதுமக்கள் நலனுக்கு பயன்படுத்துவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த மேயர் இந்திராணி அந்த இடத்தில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தனியார் நிறுவன பங்களிப்புடன் பழைய கரிமேடு மார்க்கெட் காலி இடத்தின் ஒரு பகுதியில் அறிவியல் மையம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மையத்தில் மாணவர்கள் அறிவியல் பயன்பாடுகளை செய்முறையில் கற்று தெரிந்து கொள்ள உதவும் நவீன உபகரணங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ரோபாட்டிக் தொழில்நுட்ம் ஆகியவற்றுக்கு தனித்தனி ஆய்வகங்கள், நேரடி செய்முறை சாதனங்கள் ஆகியவை அமைக்கப்படும் பார்வையிடுவது, அங்கு உள்ள சாதனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக நேரடியாக அறிவியல் கூறுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும் நூலகம், கருத்தரங்கம், வாசிப்பறை, நவீன கற்றுணர் வகுப்பறை களும் அமைக்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த மையம் இருக்கும் என்றார்.

    கோவிட் தொற்று காலத்தில் கரிமேடு மீன் மார்க்கெட்டை அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முதலில் திட்டமிடப்

    பட்டிருந்த தாகவும், ஆனால் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் நகருக்குள் அதிகாலையில் லோடு வாகனங்களின் போக்குவரத்து ஓரளவு குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×