search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மலையனூர் அங்காளம்மன்"

    • வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை.
    • சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு மார்கழி மாதஅமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால்,தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளபரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மேல்மலையனூர்-திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது.
    • மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாக பேருந்து உள்ளது.

    எப்படி செல்வது?

    மேல்மலையனூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும்,

    சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

    மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது

    மற்றும் மேல்மலையனூர்-செஞ்சி, திண்டிவனம்,பாண்டிச்சரிக்கும் மேல்மலையனூர்-விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர்-ஆரணி வேலூர் செல்லவும்,

    மேல்மலையனூர்-அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும்,

    மேல்மலையனூர்-திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    செஞ்சி-, திண்டிவனம்-, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை-, விழுப்புரம்-, வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு, பெங்களூர்- ஆகிய ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு நேரடியாக செல்ல பஸ் வசதி உள்ளது.

    மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.

    • அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
    • குழந்தை பாக்கியம் பெறுபவர்கள், அந்த குழந்தை எடைக்கு எடை நாணயம் வழங்குவது வழக்கம்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் சிறப்புகள்-10

    1. மேல்மலையனூரில் அமாவாசை தினத்தன்று நடக்கும் அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    2. அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    3. தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியத்துக்கு "திரிமதுரம்" என்று பெயர். இந்த நைவேத்தியம் அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகும்.

    4. அங்காள பரமேசுவரிக்கு செம்பருத்திப்பூ மாலை அணிவித்து 48 நாட்கள் வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    5. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும்.

    6. அங்காள பரமேஸ்வரி அருளால் குழந்தை பாக்கியம் பெறுபவர்கள், பிறகு அந்த குழந்தை எடைக்கு எடை நாணயம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    7. தடைகள் விலகி திருமணமாகும் பெண்கள் மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போடுவதை திருப்பதியில் பார்திருப்பீர்கள்.

    அதே போன்று இத்தலத்திலும் மாங்கல்யத்தை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

    8. மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களில் பலர் அதை பிரசாதமாக வினியோகிப்பார்கள்.

    சிலர் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அடை போல் மாற்றி சாப்பிடுவார்கள்.

    9. இத்தலத்து கொடி மரம் பலி பீடம் அருகில் இல்லாமல், கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

    10. ஆடி அமாவாசை தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை முழுவதும் திறந்து இருக்கும்.

    • இங்கு எலுமிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

    வெற்றி தரும் எலுமிச்சம்பழம்

    மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது.

    அந்த அளவுக்கு இங்கு எலுமிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கிக் கொடுக்கிறார்கள்.

    மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

    ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன.

    இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.

    பூக்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன.

    அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.

    தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.

    வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.

    காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது.

    எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.

    எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி.

    நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.

    பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற வேண்டும்.

    முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.

    சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.

    திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.

    மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்பம் செய்யும் ஆற்றல் கொண்டது.

    மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.

    ஒருவேளை தராவிட்டால், கருவறை அர்ச்சகரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

    அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது.

    எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள்.

    வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.

    * வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும்.

    எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

    * எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.

    * வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

    * எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.

    * அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

    * 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.

    • அங்கப்பிரதட்சணம் அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்த நேர்த்திக் கடனாகும்.
    • இந்த பாவச் சுமையை பக்தர்கள் உடனுக்குடன் இறக்கி வைத்து விட வேண்டும்.

    தோஷம் போக்கும் அங்க பிரதட்சணம்

    குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பாள்.

    பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    அங்கப்பிரதட்சணம் செய்வது அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்த நேர்த்திக் கடனாகும்.

    இந்த உலகில் உள்ள ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆவாள்.

    அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுவதாகவும் கருதப்படுகிறது.

    ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோவிலில் அம்மனுடைய சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.

    மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடும்.

    இந்த பாவச் சுமையை பக்தர்கள் உடனுக்குடன் இறக்கி வைத்து விட வேண்டும்.

    அதற்கு என்ன செய்ய வேண்டும்? அங்க பிரதட்சணமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவச் செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.

    மேலும் கோவிலைச் சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாக கருதப்படுகிறது.

    அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும்.

    தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகியவை அங்க அவயங்களாகும்.

    இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும்.

    பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கிக் குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முனபாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் கோவில் உள்ளே சென்று அம்மன் புற்றை வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    அங்க பிரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களைப் பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது.

    அங்கப் பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவைத் தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது.

    அங்காள பரமேசுவரி மீது பாரத்தை போட்டு விட்டு பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    அங்க பிரதட்சணத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் மேல்மலையனூர் தலத்தில் அதை செய்ய தவறுவதில்லை.

    • அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும்.
    • அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்டவேண்டும்.

    மூன்று முறை செல்ல வேண்டும்

    அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும்.

    அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்ட வேண்டும்.

    மூன்று முறை சென்றால் மூன்று ஆற்றல்களான இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்ற முப்பெரும் சக்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும்.

    மனிதரை பிடித்த கெட்ட ஆவிகள் யாவும் அங்காள பரமேசுவரி பார்வை பட்டவுடன் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து அழிந்து ஒழிந்துவிடும்.

    • 5, 7, 9வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம்.
    • வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்

    சீமந்த வழிபாடு

    ஒரு பெண் தான் கர்பம் அடைந்துள்ளோம் என அறிந்தது முதலாக பிரசவகாலம் வரை பத்து மாதங்கள் தோறும்,

    ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திற்கு உரிய கிரகங்களையும் அதன் அதி தெய்வங்களை வழிபட்டு நல்ல பிரசவமாக அமையவும், அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசு உருவாகி தன்வம்சத்தை விருத்தி செய்யும் குழந்தை பிறக்க இறைவனை பிராத்தனை செய்தல் நன்று.

    அங்காள பரமேஸ்வரியின் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடத்தப்படுவதற்கு முன்பு, அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துவதை மரபாக வைத்துள்ளனர்.

    5, 7, 9வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம். இந்த வழிபாட்டை செய்பவர்கள் 7 வித சாதம் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டு பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும்.

    வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்

    • மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.
    • என் வாழ்வில் ஒளியேற்று!’ என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

    27 வெள்ளிக் கிழமைகளில் சனி ஓரையில் வழிபாடு

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.

    தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள்

    அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம் பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால்,

    தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடிவிடும்.

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

    இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும்.

    என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

    • இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு.
    • ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து திருஷ்டியை கழித்து செல்வது வழக்கம்.

    திருஷ்டி கழித்தல்

    கந்தாயங்கள் மொத்தம் நான்கு.

    இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி,

    ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.

    இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும்.

    அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு.

    ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர்.

    அவ்வாறே பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.

    • ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி.
    • அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர்.

    ஆடி மாத அங்காளம்மன் வழிபாடு பயன்கள்

    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி.

    இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல் என்கிறார்கள்.

    இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம்.

    லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும்.

    உருவ சக்தி அங்காளம்மன் என்றழைக்கப்படுகிறாள்.

    அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர்.

    இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறார்கள்.

    இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறையாகும்.

    அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்களின் வம்சா வழியினரான தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றறோருடன் ஆடி மாதம் ஒன்று சேர்ந்து வந்து ஆயலத்துக்கு வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்மஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள்,பீடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள் போன்றவற்றை ஆடி மாத வழிபாடு மூலம் அங்காளம்மன் விலக்கி நல்வாழ்வு தருகிறாள் என்று கருதியே

    மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு ஆடி மாதத்தில் வந்து காணிக்கை பிரார்த்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.

    • கந்தாயப் பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது.
    • சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையில் தான்.

    பிரம்மஹத்தி தோஷம் விலக

    கந்தாயப் பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது.

    சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும்,

    மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரம்மஹத்தி பிடித்ததைப் போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரம்மஹத்தி பிடித்திருக்காது?

    என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரம்மஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

    • இங்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும்.
    • அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.

    மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்

    மேல்மலையனூர் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதன் பின்னணியில் உள்ள வரலாறு

    ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும்.

    உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.

    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.

    பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

    இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள்

    அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.

    இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள் படி நிறைவுபெறுகிறது.

    ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    ×