என் மலர்
நீங்கள் தேடியது "angalamman"
- கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- ஐந்து வகை சாப்பாடு மூட்டை கட்டி கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.
உடுமலை :
ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, உடுமலைப்பேட்டை ராமசாமி நகர்- டி பகுதி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில், அம்மனுக்கு கர்ப்பவதி அலங்காரம் மிக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஐந்து வகை சாப்பாடு மூட்டை கட்டி, (கல்கண்டு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் ,தேங்காய் சாதம், தயிர் சாதம் ) 5 கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. இப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். பாசிப்பயறு அம்மனின் கர்ப்பத்தில் வைக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து ,முளை வந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
- அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- அங்காளம்மன் கோவிலில் முதல் முறையாக தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலில் தங்கத்தேர் வடிவமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 கிலோ 987 கிராம் எடையில் தங்கத்தேர் வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது, இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளைதாரர்கள் உபயமாக தங்கத்தேரை கோவில் பரம்பரை அறங்காவலர் மகிபாலன் முன்னிலையில் கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தங்கத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா கணபதி வழிபாடு, பாலிகை பூஜை, கங்கணம் கட்டுதல், முதல் கால பூஜை, தங்கத்தேர் உற்சவர் கும்பாபிஷேகம், புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை போன்றவை நடந்தன. பின்னர் காலை 10.15 மணி அளவில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சுந்தரராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கந்தசாமி, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் மங்கையர்கரசி, துணை ஆணையாளர் (சரிபார்ப்பு அலுவலர்) சபர்மதி, ஆய்வாளர் கார்த்திகா, செயல் அலுவலர் மாதேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் மகிபாலன், கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை செயலாளர் ஈரோடு முத்துசாமி, பொருளாளர் தியாகராஜன், தலைவர் மோகனசுந்தரம் உபதலைவர், மனோகர செல்வம், அசோக், பாபு மற்றும் பரம்பரை பூசாரிகள், அறக்கட்டளைதாரர்கள், கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கோஷத்துடன் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, அங்காளம்மன் கோவிலில் முதல் முறையாக தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கோவில் பூசாரி சந்தனகருப்பு சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மதுரைவீரன், சந்தனகருப்பு, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அடைசல் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி, அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே அங்காளி என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி அங்காள பரமேஸ்வரி என்றானது.
அங்காளம்மன் யாகக் குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன், அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.
அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு, வாங்கிச் செல்வதை காணலாம்.
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.
இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.
இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.
ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரமஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரமஹத்தி பிடித்திருக்காது? என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.
கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.
இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திரு விழா வாக அங்காளம்மன் ஊஞ்சல் திரு விழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.
அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.
குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே உள்ளன. கிராமங்களில் இருந்து கூட்டம், கூட்டமாக வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வருகிறார்கள்.
ஆலய வளாகத்துக்குள் நுழை வாயிலின் அருகே பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்யேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அங்கு பெண்கள் பொங்கலிடுகிறார்கள். பொங்கல் தயாரானதும் அதன்மீது மூடியில் பச்சரிசி மாவை பிசைத்து மாவிளக்கில் தீபம் ஏற்றி உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த பொங்கலை அப்படியே அங்களம்மனுக்கு தீபாராதனையாக காட்டி வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த காட்சியை அதிகமாக இத்தலத்தில் காணலாம்.
மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக, பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.