என் மலர்

  நீங்கள் தேடியது "Gayatri Mantra"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்
  • யாக சாலையில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.

  மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த மந்திரம்.

  ஓம் பூ, புவ, ஸ்வஹ:

  தத் ஸவிதுர் வரேண்யம்

  பர்கோ தேவஸ்ய தீமஹி

  த்யோயோந: ப்ரசோதயாத்

  இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.

  யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன் என்பதே இதன் அர்த்தம். காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி தேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு ஆத்மசுத்தி கிடைக்கும்.

  இந்த மந்திரத்தை சொல்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத் தூய்மையுடனும் இருக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் சொல்வது சிறந்ததாகும். யாக சாலையில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிருஷ்ண பரமாத்மா கீதையில், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார்.
  • எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது கீழ்கண்ட பிரம்ம காயத்ரியாகும்

  ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்.

  ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ

  தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்

  இதுவே காயத்ரி மந்திரம் எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதி மயமான இறைவனை தியானிப்போமாக என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும்.

  எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.
  ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

  தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

  ஓம் பூதாதி பாய வித்மஹே
  மஹா தேவாய தீமஹி
  தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

  எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
  ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
  சக்ர ஹஸ்தாயை தீமஹி
  தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

  விஷ்ணுவின் பத்தினியான வைஷ்ணவி தேவிக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முதல் 108 எட்டு முறை வரை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை வடக்குத் திசையைப் பார்த்தவாறு துதித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி மகிழ்ச்சி, மன அமைதி உண்டாகும். வீட்டில் செல்வச் சேர்க்கை ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படுவது நீங்கும்.

  ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது யோக நித்திரையில் இருந்தவாறு உலகத்தை இயக்குகிறார் நாராயணன் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி தான் வைஷ்ணவி என அழைக்கப்படுகிறார். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம். துன்பம் பறந்தோடும்.
  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
  தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்
  ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
  தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்

  இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் தடைப்படும் பெண்கள் கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
  மந்திரங்களுக்கு தாயானவள் காயத்ரி. மங்கயர்கரசியான அம்பிகைகளுக்கென்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது. தினம்தோறும் இதனை பாராயணம் செய்ய நம்முள் மிகப்பெரிய ஆன்மீக அதிர்வை உணர முடியும்.  

  ஓம் பாலாரூபிணி வித்மஹே
  பரமேஸ்வரி தீமஹி
  தன்னோ கந்யா ப்ரசோதயாத் 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
  ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

  ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

  ஓம் சுதர்ஸனாய வித்மஹே
  ஜ்வாலா சக்ராய தீமஹி
  தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
  வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

  ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
  ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
  நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
  பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

  பொருள் :

  ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே, அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே, உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும்.
  காயத்ரி மந்திரம்

  ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
  தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

  பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது. இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில்வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகுவின் பலம் பெற, ராகு தோஷம் நீங்கவும் கீழே உள்ள ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.
  ராகு காயத்ரி மந்திரம்

  ஓம் நாகத்வஜாய வித்மஹே
  பத்ம அஸ்தாய தீமஹி
  தன்னோ ராகு ப்ரசோதயாத்

  பொருள்: நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.

  பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.
  நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும்.

  புதன் காயத்ரி மந்திரம்:

  “ஓம் கஜத்வஜாய வித்மஹே
  சுக ஹஸ்தாய தீமஹி
  தந்நோ புத ப்ரசோதயாத்”

  இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் வீட்டிலோ நல்லெண்ணெய் தீபம், ஏற்றி சிறிது பச்சைப்பயிர்களை நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 108 முறை மந்திர உரு ஜெபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள்.
  லட்சுமி காயத்ரி மந்திரம்:

  ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
  ஸ்வஹ் காலகம் தீமஹி
  தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

  இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.
  ×