search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kannika parameshwari"

    திருமணம் தடைப்படும் பெண்கள் கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
    மந்திரங்களுக்கு தாயானவள் காயத்ரி. மங்கயர்கரசியான அம்பிகைகளுக்கென்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது. தினம்தோறும் இதனை பாராயணம் செய்ய நம்முள் மிகப்பெரிய ஆன்மீக அதிர்வை உணர முடியும்.  

    ஓம் பாலாரூபிணி வித்மஹே
    பரமேஸ்வரி தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத் 
    சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
    சேலம் செவ்வாய்பேட்டையில் ஆர்ய வைஸ்ய மகாஜனங்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணிகள் முடிவடைந்து வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவிலில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவை மிக சிறப்பாக நடத்தி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து கும்பாபிஷேக கமிட்டி தலைவர் கணேஷ்குப்தா, செயலாளர்கள் ராமலிங்கம், விஜயா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் வருகிற 1-ந் தேதி காலையில் நடைபெறுகிறது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன், விநாயகர், பாலசுப்பிரமணியர், ஹரிகரசுதன், சீதா லட்சுமண அனுமன் சமேத ராமச்சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் கால பூஜையும், நாளை (வெள்ளிக்கிழமை) 2-ம் கால பூஜையும் நடத்தப்பட்டு மதியம் 2 மணிக்கு உற்சவ மூர்த்திகள், அம்மன் ஆபரணங்கள் மற்றும் இதர பொருட்களை சாரட் வண்டியில் எடுத்து வெகு விமரிசையாக ஊர்வலம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 30-ந் தேதி காலையில் 4-ம் கால பூஜையும், மாலையில் 5-ம் கால பூஜையும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அம்மன் பிரதான கோபுரம், சால கோபுரம், ராஜ கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து தசவித தரிசனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதையடுத்து 108 பால்குட ஊர்வலம் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவையொட்டி தினமும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது கமிட்டி பொருளாளர் கிருஷ்ணன், நடராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
    ×