search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்"

    திருப்பத்தூர் அருகே மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவில்  மகா கும்பாபிஷேக விழா சின்னக்கருப்பன் அம்பலம் வகையறா தலைமையில்   நடைபெற்றது. 

    முன்னதாக  மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், சின்ன கருப்பு, பெரிய கருப்பு ஆகிய தெய்வங்களுக்கான சிலைகள் வைக்கப்பட்டு அருகே  யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.   

    பின்னர் ஹோம குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து  மஹா பூர்ணாஜுதி பூஜை நடந்தது.  இதனையடுத்து  மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று  கோவிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமானம் கலசங்களுக்கு  வேத மந்திரங்கள் முழங்க கும்பகலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கபட்டன.

     பின்னர் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

    இக்கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திருப்பத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் சின்ன கருப்பு அம்பலம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.

    விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் கட்சி பிரமுகர்கள் கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதம் வழங்கப்பட்டது
    ×