search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
    X

    திருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேசுவரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்த யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் செய்யப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம்.
    Next Story
    ×