search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "angala parameswari temple"

    • அம்மன் படத்தை வைத்து தியானம் செய்தால் மிக எளிதாக அம்மன் அருள் பெறலாம்.
    • நாமத்தை குறைந்தது 108 முறை உச்சரித்தால் அம்மன் பரிபூரண அருள் தானாக வந்து சேரும்.

    புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மனின் அருளை பெற பல வழிகள் உள்ளது. அம்மன் படத்தை வைத்து தியானம் செய்தால் மிக எளிதாக அம்மன் அருள் பெறலாம். கோவிலுக்கு சென்று வரும்போது, அம்மனின் படம் கிடைத்தால் வாங்கி வைத்துக்கொண்டு எதிரில் வைத்து அதன் உருவ அமைப்பை மனதில் நிலை நிறுத்தி, தியான மந்திரம் தெரிந்தால் தியானம் செய்யலாம் இல்லை எனில் எவ்வித சலனத்துக்கும் இடமில்லாத வகையில்

    ஓம் சக்தி! அங்காளம்மா!!

    அங்காளம்மா! ஓம் சக்தி!!

    அம்மா தாயே! அருள் புரிவாயே!!

    அருள்புரிவாயே! அம்மா தாயே!!

    ஜெயமே ஜெயம்! அங்காளியே ஜெயம்!!

    ஜெயம் ஓம் ஜெயம்! அங்காளியே ஜெயம்!!

    ஜெய் ஜெய் அங்காளி!

    ஜெயமே ஜெயம் அங்காளி

    - என்ற எளிய நாமத்தை குறைந்தது 108 முறை உச்சரித்தால் அம்மன் பரிபூரண அருள் தானாக வந்து சேரும். 

    அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழ்நாட்டில் அங்காள பரமேஸ்வரிக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பல கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரியின் போது திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஊர் மக்கள் தம் வீட்டு விழாவைப் போலவே இந்த திருவிழாவை கொண்டாடுவார்கள். அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது.

    முகப்பைத் தாண்டியதும் விரிந்த பிரகாரமும், அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத் தூண்களில் கண்களைக் கவரும் வண்ணங்களில் சுதை வடிவ அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் காட்சி தருகின்றன. மகாமண்டபம் நடுவில் பலி பீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப நுழைவு வாசலில் இரு துவாரபாலகர்கள் காவல் காத்து நிற்கின்றனர். கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் தென் முகம் நோக்கி அருள்பாலிக் கிறாள்.

    அன்னையின் மேல் இரு கரங்கள் சூலம், உடுக்கையை தாங்கியிருக்க, கீழ் இரு கரங்கள் கத்தியையும் கபாலத்தையும் பற்றி இருக்கின்றன. அன்னையின் அருள் சுரக்கும் இன்முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்; அத்தனை அழகு.

    மகாமண்டபத்தின் தென்புறம் சப்த கன்னியர், பாவாடைராயன், பேச்சியம்மன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடது புறம் வலம்புரி விநாயகரும், வலது புறம் பாலமுருகனும் அருள் பாலிக்கின்றனர். கிழக்கில் பைரவர் திருமேனி உள்ளது.

    இந்த அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?

    தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம், பிரம்மதேவன் வேண்டினார். அதன்படியே அவருக்கு ஐந்து தலைகள் உருவானது. ஒரு நாள் கயிலாயத்திற்கு வந்தார் பிரம்மன். ஐந்து தலைகள் இருந்ததால் அவரை சரியாக கவனிக்காமல், ஈசன் என்றே நினைத்துக் கொண்டாள். அதே நேரத்தில் சிவபெருமானும் அங்கு வந்தார். தலைகளின் எண்ணிக்கையால் ஒரு நொடி குழப்பத்தில் ஆழ்ந்ததால் வருந்திய பார்வதி, “பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து விடுங்கள்” என சிவபெருமானிடம் வேண்டினாள். அதன்படி பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார், சிவபெருமான்.

    ஆனால் பிரம்மனின் அந்த கபாலம், சிவபெருமான் கையில் ஒட்டிக் கொண்டது. நடந்ததை அறிந்த சரஸ்வதி தேவி கோபம் கொண்டாள்.

    “நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, மயானம் தோறும் அலைந்து திரிவீர்” என்று சிவபெருமானுக்கும், “நீ கோர உருவம் கொண்டு செடி கொடிகளை அணிந்து, பூத கணங்களுடன் காடு தோறும் அலைவாய்” என்று பார்வதிக்கும் சாபமிட்டாள்.



    அதன்படியே சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவபெருமான் பிச்சாண்டியாக உருமாறி யாசகம் பெறத் தொடங்கினார். பார்வதி சுய நினைவின்றி பசி தாளாது, மயானத்தில் கிடைக்கும் பிணங்களைத் தின்று பசியாறினாள். இவர்களின் நிலை மையை கண்டு வேதனை அடைந்த மகாவிஷ்ணு, மோகினி உருவம் கொண்டு சரஸ்வதியிடம் சென்றார். இருவரின் சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை சிவபெருமானிடமும், பார்வதியிடமும் கூறினார்.

    சிவபெருமான் கையில் ஒட்டியிருந்த கபாலம், பிச்சை மூலம் நிரம்பினால் தான் சிவபெருமானின் சாபம் விலகும். ஆனால் எவ்வளவு பிச்சையிட்டாலும் அந்த கபாலம் நிரம்பவே இல்லை. உடனே அங்காளம்மனாக உருவெடுத்த பார்வதி, மகாலட்சுமியின் உதவியுடன் பிரம்மதேவனின் கபாலத்தை காலால் மிதித்துக் கொண்டாள். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

    “நான் எப்போது உங்களை வந்து சேர்வது?” என்று அங்காள பரமேஸ்வரி உருவில் இருந்த பார்வதி, சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு ஈசன், “மாசி மாத சிவராத்திரியின் போது என்னுள் நீ கலப்பாய். அதுவரை உன்னுடைய நெற்றிப் பொட்டில் நான் வாசம் செய்வேன்” என்றார். அதன்படி சிவராத்திரியின் போது பார்வதி சாபவிமோசனம் பெற்று சிவபெருமானுடன் இணைந்தாள் என்பது தல வரலாறு.

    இந்த ஆலயத்தில் சிவராத்திரியின் போது மயானத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், முதல் நாள் தீச்சட்டி, அக்னி கொப்பரை ஏந்தி பக்தர்கள் ஆலயத்தை வலம் வருவார்கள். மாலையில் அன்னை வீதியுலா வருவார். இரண்டாம் நாள் மாலை அங்காள பரமேஸ்வரியாய் வேடம் அணிந்த மருளாளி, சூலத்தோடு ஆவேசத்துடன் ஆடுவார். ஆலயம் முன்பு ஏராளமான ஆடுகள் பலியிடப்படும்.

    பிறகு இரவு 2 மணிக்கு மயானத்திற்கு செல்லும் மருளாளி, அங்கேயே படுத்துக் கொள்வார். பின் பாடல்கள் பாடி அவரை ஆலயம் அழைத்து வருவார்கள். மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் விழாவானது நிறைவு பெறும். இரவு அன்னை வீதியுலா வருவார்.

    இந்த ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர்களும், ஆலய முகப்பை ஒட்டி தல விருட்சங்களான அரசும் வேம்பும் உள்ளன. தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் அச்சத்தை போக்கி, அவர்களது அனைத்து குறைகளையும் நீக்கி அருள்கிறாள் அங்காள பரமேஸ்வரி அம்மன். எனவே இத்தலம் குறை நிவர்த்தி தலமாக விளங்குவதில் வியப்பில்லை.

    அமைவிடம்

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், காரைக்கால் செல்லும் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது திருக்கடையூர். பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். திருக் கடையூருக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.
    ஆவடி அருள்மிகு சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மார்ச் மாதம் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய பிரார்த்தனை தலம் இதுவாகும்.

    இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. விளம்பி வருடம், மாசி மாதம் 29-ம் நாள் 13.3.2019 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்ளாக ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் மற்றும் மாரிதாஸன் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் :

    9.3.2019 அன்று யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்றைய தினம் குருவந்தனம், விக்னேஷ்வர பூஜை, கிராம தேவதை அனுக்ஞை, ஸ்ரீ வாஞ்சாகல்ப மஹா கணபதி ஹோமம் ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி மூலமந்திர ஹோமம் கோபுர கலச பூஜை, மஹா தீபாராதனை பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. மாலையில் நவரத்தின யந்திர பிரதிஷ்டை ஸ்ரீ ரக்தூள் பரமேஸ்வரி பிரதிஷ்டை வாஸ்து சாந்தி, சப்த கனயகா பூஜை ஷோடச சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.

    10-ம் தேதி அன்று கோபூஜை, தன பூஜை ஏகாதச ருத்ரஹோமம் ஸ்ரீ சுதர்தன ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், த்ரவ்யாஹூ ஹோமம், தீபாரதனையும், மாலையில் கிராம சாந்தி, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், துர்கா சப்தசதீ பாராயணமும் நடைபெறுகிறது.

    11-ம் தேதி காலையில் நவகிரஹ ஹோமம் அக்னி ஸங்கிரஹனம், தீர்த்த சங்கரஹணம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மஹாதீபாராதனை பிரசாத விநியோகமும், மாலையில் விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், யாகசாலை பிரவேஷம், முதல்கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

    12-ம் தேதி விசேஷசந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் விசேஷசந்தி, பாவனாபிஷேகம், வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, 1008 தாமரை புஷ்பத்தால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரஜதபந்தன சாற்றுதல், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

    13-ம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, நாடீசந்தானம், தத்வார்ச்சனை, நாமகரணம், நவகுண்ட பட்டுபுடவை வஸ்திர சமர்ப்பணம், ஜயாதி ஹோமம், க்ரஹப்ரீதி யாத்ரா ஹோமம், யாத்ராதானம், கலச புறப்பாடு, மூலஸ்தான விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், சுயம்பு அம்பாளுக்கு மற்றும் சப்த கன்னிகைக்கும் மூலஸ்தான அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனையும், மாலையில் மஹாபிஷேகம் மண்டலாபிஷேகம் நடக்கிறது.

    யாக சாலை 4 காலங்களிலும் கோபூஜை மற்றும் வேதம், ஆகமம், திருமுறை பாராயணங்கள் நடைபெறும்.

    மஹாகும்பாபிஷேகத்தில் பூஜை செய்த பித்தளை கலசங்களை பக்தர்களுக்கு கொடுக்க இருப்பதால் ரூ.300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற இருப்பதால் ஒருநாள் பூஜைக்கு ரூ. 2000 திருக்கோவிலில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி அமாவாசை உற்சவ விழா நடைபெற்றது.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி அமாவாசை உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உற்சவ அம்மன் மயில் வாகனத்தில் அமர்ந்தவாறு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப் பட்டிருந்தது. இரவு 11.45 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மனை வடக்கு வாயில் வழியாக பம்பை, மேளதாளம் முழங்க எடுத்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினர். தொடர்ந்து பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், தொடர்ந்து தீபாரதனையும் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
    ×