search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "angala parameswari amman"

    ஆவடி அருள்மிகு சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நாளை மறுநாள் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய பிரார்த்தனை தலம் இதுவாகும்.

    இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. விளம்பி வருடம், மாசி மாதம் 29-ம் நாள் நாளை மறுநாள் 13.3.2019 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்ளாக ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் மற்றும் மாரிதாஸன் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பபிஷேக விழா 9-ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று காலையில் நவகிரஹ ஹோமம் அக்னி ஸங்கிரஹனம், தீர்த்த சங்கரஹணம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மஹாதீபாராதனை நடைபெற்றது.

    நாளை 12-ம் தேதி விசேஷசந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் விசேஷசந்தி, பாவனாபிஷேகம், வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, 1008 தாமரை புஷ்பத்தால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரஜதபந்தன சாற்றுதல், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, நாடீசந்தானம், தத்வார்ச்சனை, நாமகரணம், நவகுண்ட பட்டுபுடவை வஸ்திர சமர்ப்பணம், ஜயாதி ஹோமம், க்ரஹப்ரீதி யாத்ரா ஹோமம், யாத்ராதானம், கலச புறப்பாடு, மூலஸ்தான விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், சுயம்பு அம்பாளுக்கு மற்றும் சப்த கன்னிகைக்கும் மூலஸ்தான அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
    ×