search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"

    • நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார்.
    • வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க வியாபாரி முத்துக்குமார் போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

    அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார். நடராஜன் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்த பை முத்துக்குமாருடையது என்பதை கண்டறிந்த போலீசார் டி.எஸ்.பி. சுதீருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் சாலையோரம் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி நடராஜனை பாராட்டி சால்வை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    பின்னர் மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமாரிடம் 4 கிலோ வெள்ளி பொருட்களை ஒப்படைத்தார். அப்போது செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.

    • 27 நிமிடம் 32 வினாடிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாணவி முவித்ரா புதிய சாதனை படைத்தார்.
    • 10 கிலோமீட்டர் தூரத்தை மாணவி கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன்-கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா.

    புதிய சாதனை

    6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததை முறியடிக்கும் வகையில் முவித்ரா புதிய சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சாய் நிகேதன் பள்ளி முதல்வர் தனலட்சுமி, மூத்த வக்கீல் அறங்காவலர் சண்முகையா, இன்ஸ்பெக்டர்கள் சண்முக வடிவு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் அந்த மாணவியின் ஸ்கேட்டிங் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாணவி சங்கரன்கோவில் கழுகு மலை சாலையில் இருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து மாணவி முவித்திராவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, கல்பனா, முன்னாள் ராணுவவீரர் யோஸ்வா, தலைமை போதகர் பாபு, சிவன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முவித்ராவின் சாதனை முயற்சி முன்னேற்பாடாக சங்கரன்கோவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் குருவிகுளம் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் பாக்கிய ராஜ் செய்திருந்தார்.

    அமைச்சர் உதயநிதியிடம்...

    சாதனை படைத்த மாணவி முவித்ராவை பாராட்டிய ராஜா எம்.எல்.ஏ., அவரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்து பெற இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த சாதனை படைத்திருப்பது சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை யாகும். இது போன்ற சாதனை முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் தி.மு.க. அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் மேலும் இது போன்ற பயிற்சிகளுக்கு தேவையான உதவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான் என்று சுப வீரபாண்டியன் பேசினார்.
    • பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி பயிற்சி பாசறை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஆலோசனை

    தி.மு.க. மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி வரவேற்று பேசினார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயா சவுந்தர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    சமத்துவம், சமூகநீதி

    கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் உறுப்பினர்களாக இருப்பதற்கு காரணம் கட்சியின் கொள்கை மற்றும் கட்சித் தலைவர்களின் திறமையான செயல்பாடு. திராவிட கொள்கையின் உயிர்நாடியாக இருப்பது சமத்துவம், சமூகநீதி என்பதாகும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக இருக்க வேண்டுமென பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான்

    அதனால் தான் இன்று பெண்கள் சமையலறையில் இருந்து வெளியே வந்து கவுன்சிலர்களாக, சேர்மன்களாக, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, ஆளுமை செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என சட்டம் இயற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துச்செல்வி, ஆலடி எழில்வாணன், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் நன்றி கூறினார்.

    • தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு, மாணவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினர்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவை சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் முன்னிலையிலும், தேசிய மாணவர் படை உதவி அதிகாரி அம்பிகா தேவி, ஒருங்கிணைப்பிலும் தூய்மைபணி நடைபெற்றது. மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள மருத்துவர் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, வந்திருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தூய்மை இந்தியா இயக்கம்- சமூக சேவையை திறம்பட நடத்தினர்.

    • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 85.44 லட்சம் செலவில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் முருகராஜ், நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பள்ளி மேலாண்மை குழு துணைதலைவர் கலைச்செல்வி, காவல்கிளி, தி.மு.க. வார்டு செயலாளர் வீராசாமி, மாணவர் அணி வீரமணி, விக்னேஷ், மாவட்ட ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் சங்கர், ஜான் ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
    • ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைதுறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் வார்டு செயலாளர்கள், வீராசாமி, சிவா, வக்கீல் செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு கணேஷ், ஜெயக்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, ஒன்றிய இளைஞரணி முருகையா பாண்டியன் மற்றும் ஒன்றிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மல்லிகா, செல்வம் மற்றும் முத்துப்பாண்டி மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள், கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது.
    • பணிகளை பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

    ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

    இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை தாமதமாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வர வில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்ததுடன் அதனை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடு ஞ்சாலைத்துறை அதிகாரி களை அழைத்து ஆலோ சனையில் ஈடுபட்டார்.

    ஆலோசனையின் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை இரண்டு துறைகளும் சேர்ந்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது. இதையும் நெடு ஞ்சா லைத்துறை அதிகாரி களும் கலந்து பேசி அவர்கள் வழி காட்டுத லின்படி உடனடி யாக சரி செய்ய வேண்டும்.

    இந்த பணிகளை போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்க ளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலக ம்மாள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் பிரிய தர்ஷினி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபா நாயகம், நக ராட்சி மேற்பார் வையாளர் கோமதி நாயகம், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர்கள் பல வேசம், முத்து மணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து 500 பெட்ஷீட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்சேகர் தலைமை தாங்கினார். மருத்துவர் மாரிராஜ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து அரசு மருத்துவ மனைக்கு 500 பெட் சீட்டுகளை வழங்கினார். மேலும் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ, தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு நோயாளிகளுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் செய்யப்படும் வகையில் பல்வேறு தேவை கள் நிறை வேற்றப் பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மருத்து வர்கள், செவிலி யர்கள், மருத்துவமனை பணி யாளர்கள் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை குணப்படுத்தி அவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். நிகழ்ச்சி யில் நகர துணை செய லாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வீரமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது.
    • ஆராய்ச்சி மைய கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அந்த ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    இதில் கால்நடை மருத்துவர் துறை மண்டல துணை இயக்குனர் ரோஜர், கால்நடை மருத்துவர் மலர்கொடி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். அதில், 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

    தேர்வான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு நெல்லை வன கோட்ட தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வனச்சரக அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபாலன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியை தென்காசி எம்.பி. தனுஷ் குமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரி முத்து, ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வனவர் பிரவீன் நன்றி கூறினார்.

    • சங்கர், தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
    • வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சங்கர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). இவர் ஜவுளி வியாபாரியான இவர் இந்து முன்னணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவர் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    பங்குசந்தையில் முதலீடு

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதால், அவரது பங்கு சரிவு ஏற்பட்டு நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரிசெய்ய வேறு இடங்களில் கடன் வாங்கி முதலீடு செய்து அந்த பணத்தையும் அவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர், கடந்த 2 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு நேரம் வரை அவர் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.

    அப்போது அவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அவரது மனைவி சண்முகப்பிரியா கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், சங்கர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×