search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கேட்டிங்"

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • மாணவி முவித்ரா 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
    • ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன், கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா. 6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் மாணவி முவித்ரா சங்கரன்கோவில் கழுகுமலை சாலையிலிருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ல் இடம் பிடித்தார்.

    அதனை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார். அப்போது விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா பயிற்சி நிலைய நிறுவனர் சுரேஷ்குமார், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ், முவித்ராவின் தாயார் கோகிலா மற்றும் மாஸ்டர் சாந்தனு, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 27 நிமிடம் 32 வினாடிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாணவி முவித்ரா புதிய சாதனை படைத்தார்.
    • 10 கிலோமீட்டர் தூரத்தை மாணவி கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன்-கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா.

    புதிய சாதனை

    6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததை முறியடிக்கும் வகையில் முவித்ரா புதிய சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சாய் நிகேதன் பள்ளி முதல்வர் தனலட்சுமி, மூத்த வக்கீல் அறங்காவலர் சண்முகையா, இன்ஸ்பெக்டர்கள் சண்முக வடிவு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் அந்த மாணவியின் ஸ்கேட்டிங் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாணவி சங்கரன்கோவில் கழுகு மலை சாலையில் இருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து மாணவி முவித்திராவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, கல்பனா, முன்னாள் ராணுவவீரர் யோஸ்வா, தலைமை போதகர் பாபு, சிவன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முவித்ராவின் சாதனை முயற்சி முன்னேற்பாடாக சங்கரன்கோவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் குருவிகுளம் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் பாக்கிய ராஜ் செய்திருந்தார்.

    அமைச்சர் உதயநிதியிடம்...

    சாதனை படைத்த மாணவி முவித்ராவை பாராட்டிய ராஜா எம்.எல்.ஏ., அவரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்து பெற இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த சாதனை படைத்திருப்பது சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை யாகும். இது போன்ற சாதனை முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் தி.மு.க. அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் மேலும் இது போன்ற பயிற்சிகளுக்கு தேவையான உதவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • அதிராம்பட்டினத்தில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
    • சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

    அதிராம்பட்டினம்:

    கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

    இந்த ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் தொடக்கி வைத்தார்.அதிராம்பட்டினத்தில் இருந்து தொடர்ந்து 15 கிலோமீட்டர் மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் 7 மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர் .இந்த ஸ்கேட்டிங் அதிராம்பட்டினம் சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூதாட்டிகள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
    • ஆஷிஷ் என்பவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் உள்ளது.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரையப்பட்ட புகைப்படங்கள் தான் சமீப காலமாக இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பில்கேட்ஸ், போப் ஆண்டவர், டிரம்ப் என பல்வேறு பிரபலங்கள் குறித்த ஏ.ஐ. படங்கள் ஏற்கனவே வைரலாகி இருந்தன.

    இந்நிலையில், மூதாட்டிகள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. 'கிராண்ட்மாஸ் ஸ்கேட்டிங்' என்ற தலைப்புடன் ஆஷிஷ் என்பவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களில் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் உள்ளது. அந்த புகைப்படத்தில் சிலர் கேரள பெண்கள் போன்று சட்டை, வேட்டி அணிந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி லைக்ஸ்களை குவிக்கிறது.

    • 9- வது ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடைபெற்றது.
    • ரிச் ஹவுசிங் அன்ட் பிராப்பர்டீஸ் சேர்மன் எ.ஆர்.ஆதி கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    நெல்லை கலாச்சார கல்வி , விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, நெல்லை ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் ரிச் ஹவுசிங் பிராப்பர்டிஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய தென்மாவட்ட அளவிலான 9- வது ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டிகளை லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை தொடங்கி வைத்தார்.

    ரிச் ஹவுசிங் அன்ட் பிராப்பர்டீஸ் சேர்மன் எ.ஆர்.ஆதி கார்த்திக் முன்னிலை வகித்தார். விவேகா அறக்கட்டளை நிறுவனர் அழகேசராஜா வரவேற்று, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். அறக்கட்டளை தலைவர் அமல் ஆர் தாமஸ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர்கள் ரவிக்குமார், ஸ்டார்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவன சேர்மன்கள் எ.ஆர்.ஆதி கார்த்திக், எ.ஆர்.கண்ணன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்தினர், விவேகா அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.

    விவேகா அறக்கட்டளை அதிசயராஜ் நன்றி கூறினார்.

    • சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
    • ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பிடித்தது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி ஆகியவை இணைந்து, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புறச்சூழலை பாது காப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செய லாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் துணைத் தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவங்கி வைத்தார்.

    இதில், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடமும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற அணியினருக்கு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டி யன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.

    ×