என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
- மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். அதில், 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தேர்வான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.