search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் தி.மு.க. மகளிர் அணி பயிற்சி பாசறை கூட்டம்
    X

    கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் பேசிய காட்சி. 

    சங்கரன்கோவிலில் தி.மு.க. மகளிர் அணி பயிற்சி பாசறை கூட்டம்

    • பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான் என்று சுப வீரபாண்டியன் பேசினார்.
    • பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி பயிற்சி பாசறை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஆலோசனை

    தி.மு.க. மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி வரவேற்று பேசினார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயா சவுந்தர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    சமத்துவம், சமூகநீதி

    கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் உறுப்பினர்களாக இருப்பதற்கு காரணம் கட்சியின் கொள்கை மற்றும் கட்சித் தலைவர்களின் திறமையான செயல்பாடு. திராவிட கொள்கையின் உயிர்நாடியாக இருப்பது சமத்துவம், சமூகநீதி என்பதாகும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக இருக்க வேண்டுமென பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான்

    அதனால் தான் இன்று பெண்கள் சமையலறையில் இருந்து வெளியே வந்து கவுன்சிலர்களாக, சேர்மன்களாக, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, ஆளுமை செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என சட்டம் இயற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துச்செல்வி, ஆலடி எழில்வாணன், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×