தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி

தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு, மாணவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினர்.
தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி
Published on

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவை சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் முன்னிலையிலும், தேசிய மாணவர் படை உதவி அதிகாரி அம்பிகா தேவி, ஒருங்கிணைப்பிலும் தூய்மைபணி நடைபெற்றது. மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள மருத்துவர் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, வந்திருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தூய்மை இந்தியா இயக்கம்- சமூக சேவையை திறம்பட நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com