search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்த 6 வயது மாணவி-ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு
    X

    ராஜா எம்.எல்.ஏ.,, மாணவி முவித்ராவை வாழ்த்தி பரிசு வழங்கிய காட்சி. அருகில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் உள்பட பலர் உள்ளனர்.

    சங்கரன்கோவிலில் ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்த 6 வயது மாணவி-ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு

    • 27 நிமிடம் 32 வினாடிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாணவி முவித்ரா புதிய சாதனை படைத்தார்.
    • 10 கிலோமீட்டர் தூரத்தை மாணவி கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன்-கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா.

    புதிய சாதனை

    6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததை முறியடிக்கும் வகையில் முவித்ரா புதிய சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சாய் நிகேதன் பள்ளி முதல்வர் தனலட்சுமி, மூத்த வக்கீல் அறங்காவலர் சண்முகையா, இன்ஸ்பெக்டர்கள் சண்முக வடிவு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் அந்த மாணவியின் ஸ்கேட்டிங் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாணவி சங்கரன்கோவில் கழுகு மலை சாலையில் இருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து மாணவி முவித்திராவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, கல்பனா, முன்னாள் ராணுவவீரர் யோஸ்வா, தலைமை போதகர் பாபு, சிவன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முவித்ராவின் சாதனை முயற்சி முன்னேற்பாடாக சங்கரன்கோவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் குருவிகுளம் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் பாக்கிய ராஜ் செய்திருந்தார்.

    அமைச்சர் உதயநிதியிடம்...

    சாதனை படைத்த மாணவி முவித்ராவை பாராட்டிய ராஜா எம்.எல்.ஏ., அவரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்து பெற இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த சாதனை படைத்திருப்பது சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை யாகும். இது போன்ற சாதனை முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் தி.மு.க. அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் மேலும் இது போன்ற பயிற்சிகளுக்கு தேவையான உதவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×