சங்கரன்கோவில் அருகே ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது. ஆராய்ச்சி மைய கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.
வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அந்த ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

இதில் கால்நடை மருத்துவர் துறை மண்டல துணை இயக்குனர் ரோஜர், கால்நடை மருத்துவர் மலர்கொடி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com