search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை முயற்சி"

    • உடனடியாக இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
    • மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் இந்த வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருந்தனர்.

    இதனை அந்த வழியாக வந்த வங்கியின் மேலாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறத்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் போலீசார் வங்கியின் சுவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    எனவே மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் சுவரை துளையிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம்நபர்களை தேடி வருகின்றனர்.

    • லாக்கரை உடைக்க முடியாததால் விபூதி குங்குமம் தூவி சென்றனர்
    • கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்குள்ள ஒரு பீரோவை உடைத்து அதனை திறந்தனர்.

    அதில் நகை பணம் எதுவும் இல்லை. மற்றொரு அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடியும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் தங்களுடைய கைரேகை பதிவு ஆகாமல் இருக்க தாங்கள் கொண்டு வந்த விபூதி குங்குமம் ஆகியவற்றை அலுவலகம் முழுவதும் தூவி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலையில் நிதி நிறுவனத்தை திறக்க வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவு ஆகியிரு ப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் விபூதி குங்குமத்தை வீசி சென்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முகமூடி அணிந்த மர்ம நபர் கண்காணிப்பு காமிராவை அடித்து உடைத்து துணிகரம்
    • கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு முக மூடி அணிந்த மர்ம நபர் வந்தார்.அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று பராமரிப்பாளர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது.
    • ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி பிரீத்தா (31). இவர் தற்போது அன்னஞ்சி விலக்கில் குடியிருந்து வருகிறார். வாரம் ஒருமுறை தாமரைக்குளத்தில் உள்ள வீட்டை பார்த்து செல்வார். மேலும் மரியபாக்கியம் என்பவரை பராமரிப்பி ற்காக நியமித்துள்ளார்.

    சம்பவத்தன்று மரிய பாக்கியம் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து பிரீத்தாவுக்கு தகவல் தெரிவித்து, பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்.

    • ஐயப்பன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மூலவர் ஐம்பொன் சிலை மற்றும் செப்பு வெண்கல சிலைகள் கோவில் வளாகத்திலேயே ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோவில் வளாகத்தில் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் சென்றதும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    • 4 கடைகளிலும் நேற்று முன்தினம் இரவு, பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னை:

    அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் 3 மருந்து கடைகள், வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் அலுவலகம் உள்ளது. இந்த 4 கடைகளிலும் நேற்று முன்தினம் இரவு, பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடைகளின் பூட்டை உடைத்தது தொடர்பாக பெரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், ஆலா சதீஷ், சத்தியநாராயணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி, பகுதி-2, 19-வது தெருவில் சப்தகிரி என்ற வணிக வளாகம் உள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் முன் பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இன்று அதிகாலை 3.10 மணிக்கு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்தனர்.

    அவர்கள் கையில் வைத்து இருந்த இரும்பு ராடால் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவை உடைத்தனர்.

    பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தி மூலம் அலாரம் ஒயரை துண்டித்தனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.

    இதனைக் கேட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதே போல் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது.

    தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க வந்தது தெரிய வந்தது.

    மேலும் கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் வடமாநில நபர்கள் ஈடுபட்டார்கள் அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளை போகாமல் தப்பியுள்ளது. இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் காசிராஜ்(67). இவருக்கு குபேரன்நகரில் சொந்தவீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் சிவகாசி வடமலாபுரம் பகுதிைய சேர்ந்த நாச்சியார்கண்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    மேல்தளத்தில் காசிராஜ் அவ்வப்போது தங்குவதற்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    மேல்தளத்திலும் இதேபோல் பொருட்கள் சிதறிகிடந்தன. ஆனால் வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கனி ராவுத்தர் குளம் அடுத்த ஈ.பி. நகரில் தனியார் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தின் ஒயர்களை பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் உடனே அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த பெண் நசிமாபானு என்பதும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகனுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.

    மேலும் தறிப்பட்டறை தொழிலாளியான இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து ள்ளார்.

    இந்நிலையில் தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏ.டி.எம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    இதனையடுத்து நசிமாபானுவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ஒயர் கட்டர் மற்றும் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாசலில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க மர்ம நபர் முயன்றுள்ளார். அப்போது எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் அடித்துள்ளது. இருந்தபோதும் ஏ.டி.எம். மிஷினை உடைக்க முடியாததால் கொள்ளையன் வேகமாக வெளியேறினார். இதையடுத்து அலாரம் அடித்து வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனால் வங்கி மேலாளர் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் கொள்ளையனை தேடும் பணியில் இறங்கினர். அப்போது வங்கி அருகில் இருந்த 2 செல்போன் கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ரூ.16,000 பணம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் உடமைகளை சோதித்த போது செல்போன்கள் மற்றும் திருடு போன ரூ.16 ஆயிரம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதையும், செல்போன் கடையில் கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டார்.

    அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சூரியகாந்தி (வயது 21) என தெரிய வந்தது. அவரை கைது செய்து இவர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    • சத்தம் கேட்டு எழுந்த ராஜ்கண்ணன் வீட்டின் வெளியே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார்.
    • வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ் கண்ணன்.தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கினார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 4 பேர் கும்பல் வீட்டின் சுவர் ஏறி குதித்து புகுந்தனர். அவர்கள், வீட்டின் மேல்மாடிக்கு சென்று கொள்ளையில் ஈடுபட கதவை தட்டினர். சத்தம் கேட்டு எழுந்த ராஜ்கண்ணன் வீட்டின் வெளியே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 வாலிபர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. தொழிலாளர்கள் போல் இங்குள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் அவர்கள் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏ.டி.எம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார்.
    • பின்னர், வெல்டிங் எந்தி ரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, மெட்ட லாவில் தனியார் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு அந்த மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார். பின்னர், வெல்டிங் எந்திரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு அருகே இருந்த கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் அங்கு வந்துள்ளனர். அதைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்ப வம் தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மையத்திற்குள் சென்று திருட முயற்சித்துள்ளார். மற்றொருவர் வெளியே நின்று பொதுமக்களின் நடமாட்டத்தை கண்கா ணித்து வந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவ ரங்கள் தெரியவந்துள்ளது.

    எனினும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆயில்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பல்வேறு தடயங்க ளைக் கொண்டு, ஏ.டி.எம் மையத்தை கொள்ளை யடிக்க முயற்சித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×