பெரியகுளம் அருகே வீட்டு கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சி

சம்பவத்தன்று பராமரிப்பாளர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது.ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி பிரீத்தா (31). இவர் தற்போது அன்னஞ்சி விலக்கில் குடியிருந்து வருகிறார். வாரம் ஒருமுறை தாமரைக்குளத்தில் உள்ள வீட்டை பார்த்து செல்வார். மேலும் மரியபாக்கியம் என்பவரை பராமரிப்பி ற்காக நியமித்துள்ளார்.

சம்பவத்தன்று மரிய பாக்கியம் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து பிரீத்தாவுக்கு தகவல் தெரிவித்து, பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com