search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja seized"

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ganja

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளாவிலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு வந்து சேர்ந்தது.

    இந்த ரெயிலின் பொதுப் பிரிவு பெட்டியில் கேட்ப்பாரற்று மூன்று பேக்குகள் கிடந்தன. இந்த ரெயிலில் இரவுப் பணியில் இருந்த தலைமை காவலர் சோதனை மேற் கொண்டபோது மூன்று பைகள் சந்தேகப்படும்படி இருப்பதை பார்த்து அதை கைப்பற்றினார்.

    அந்த பைகளில் சோதனை நடத்தியதில் அதில் சிறு சிறு பொட்டலமாக கஞ்சா செடிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் அதில் 40 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா மூட்டைகளை சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசார் உடனடியாக அங்குள்ள ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ஆலப்புழா ரெயிலில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? யார் கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. போலீசை பார்த்ததும் கடத்தல்காரர்கள் பைகளை போட்டு விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று தெரிகிறது. #ganja

    புதுக்கோட்டை சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து புழல் சிறையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். சிறுவர் சீர் திருத்த பள்ளியில் 25க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக்கு உட்பட்ட சிறுவர்கள் உள்ளனர்.

    போலீசார் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில அறைகளில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி கூறும் போது, இது வழக்கமான சோதனை, எந்தவித பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றார்.

    தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் வியாபாரி உள்பட 13 பேரை கைது செய்தனர். #GanjaSeized
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மாரியம்மன் கோவில் பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (வயது 67) என்ற பெண் வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    இதில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 60 கிலோ இருந்தது. இதன்மதிப்பு ரூ.6 லட்சத்துக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபாரி தங்கமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சோலைராஜா (32), செல்வம் (38), சத்யராஜ் (28), ராஜ்கரண் (30), ராஜேந்திரன், முத்தையா (20) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனால் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலுடன் கைதான 13 பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #GanjaSeized


    பல்லடத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வடமாநில வாலிபரை கைது செய்தனர்.

    பல்லடம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணநாயக் (வயது32). இவரது மனைவி காமினி நாயக் (25). இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. பல்லடம் சின்னூர் பிரிவில் உள்ள வாடகை வீட்டில் தங்கிஅருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கிருஷ்ணநாயக்யை பிடித்து விசாரணை நடத்தியதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 18 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கிருஷ்ணநாயக்யையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.

    கைதிகளை பார்க்கவரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர்.

    இதற்கு சில போலீசாரும் உடந்தையாக இருக்கின்றனர். சமீபத்தில் வேலூர் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தியபோது கத்தியை போலீசார் கைப்பற்றினர்.

    இந்த நிலையில், ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அறை எண் 6-ல் உள்ள கைதிகளிடம் இருந்து 5 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து, ஒட்டு மொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக, பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். #Ganjasmuggling

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் வழியாக சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

    இதில் தொடர்புடைய நபர்கள் பலர் பிடிபட்ட போதும் அந்த பகுதிகளில் போதிய கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் கடத்தப்படுவதாக திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று அதி காலை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற் கொண்டனர். அப்போது அங்குள்ள கடலோர பகுதியில் நாட்டுப்படகும், அதன் அருகில் சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கியதும் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் அந்த படகை சோதனை செய்தபோது அதில் 8 பண்டல்களில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 200 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்த போலீசார் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர்கள் யார்? யாருக்கு கடத்தப்படுகிறது? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அவ்வப்போது 10 கிலோ முதல் 50 கிலோ வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Ganjasmuggling

    மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா மற்றும் போதைபொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மண்டம் அருகே உள்ள சீனியப்பா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் அடுத்து ராமேசுவரம் டி.எஸ்.பி. (பயிற்சி) கோபாலகிருஷ்ணன், உச்சிப் புளி சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தனிப் பிரிவு தலைமை காவலர்கள் வரதராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சீனியப்பா கடற்கரையில் ஒரு படகு அருகே மூட்டை ஒன்று கேட்பாராற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்தபோது. அதில் 152 பாக்கெட்டுகள் கொண்ட 304 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சுந்தர மடையானை சேர்ந்த முருகன் (வயது 45), ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த ஜெயகணேஷ் (35), கீழக்கரை பஞ்சந்தாங்கியை சேர்ந்த கிட்டிஸ்வரன் என்ற முத்து (37) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும்.

    சென்னை கோயம்பேட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பட்டா கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் மேட்டுக்குப்பம் தேவி கருமாரி அம்மன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இரண்டு பட்டா கத்தியையும் அங்கிருந்து கைப்பற்றிய போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தாலப்பாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்கிற மூர்த்தி, கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருவர் மீதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. #Tamilnews
    வேதாரண்யம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பாலு மற்றும் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம், மயிலாடுதுறை தனிப்படை உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் ரகசிய தகவலின் பேரில் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை பகுதிக்கு ரோந்து பணி சென்றனர்.

    அப்போது அங்குள்ள அக்கரை பள்ளிவாசல் தென்புறம், கடற்கரை பகுதியில் 4 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் புஷ்பவனத்தை சேர்ந்த சுகுமாறன் (வயது 24), கோடியக்காடு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (43), புஷ்பவனத்தை சேர்ந்த குமரசெல்வம் (40), அதே பகுதியை சேர்ந்த உமா ரமணன் (23) ஆகிய 4 பேரும் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு உள்ளிட்ட குழுவினர் அவர்கள் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கிலோ கொண்டு கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா பதுக்கியதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் பேரில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி, பாப்பாபட்டி பகுதியில் கஞ்சா பதுக்கிய ஜெயக்குமார் (வயது 32), சந்திரன் (34), ராகதேவன் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    செக்கானூரணி மீனாட்சி பட்டியில் வேளாங்கண்ணி என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியில் பரமன் (42), அவரது மனைவி லட்சுமி (36) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அச்சம்பத்து பகுதியில் ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கீரிப்பட்டி பகுதியில் போலித்தேவன் (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆஸ்டின்பட்டி, உச்சப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிய சரஸ்வதி (62), கார்த்திக் பாலு (36) ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 7 1/2 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ. 17 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 104 கிலோ கஞ்சா பதுக்கியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கும்பலை பிடிக்கும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

    திண்டுக்கல் சிறையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்ட சிறை தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் சோதனை பிரிவு குழுவினர் திண்டுக்கல் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 4 கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மற்றொரு கைதியிடம் சுமார் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உதவி சிறை அலுவலர் ராஜசேகர் அஜாக்கிரதையாக இருந்ததால் அவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் கைதிகளையும் எச்சரித்தனர்.

    வேலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் சிறை துணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் சிறையில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் விதி மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் கைதிகள் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    அலங்காநல்லூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி தனியார் வாகன விற்பனை மையத்தில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 5½ கிலோ கஞ்சா, ரூ.400 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை பூந்தமல்லி நகரை சேர்ந்த கர்ணன் (வயது 55), தத்தனேரி பாக்கியநாதபுரத்தை சேர்ந்த இன்பராஜா (35), அலங்காநல்லூர் பெரிய ஊர்சேரியை சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

    ×