search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested north state person"

    பல்லடத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வடமாநில வாலிபரை கைது செய்தனர்.

    பல்லடம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணநாயக் (வயது32). இவரது மனைவி காமினி நாயக் (25). இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. பல்லடம் சின்னூர் பிரிவில் உள்ள வாடகை வீட்டில் தங்கிஅருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கிருஷ்ணநாயக்யை பிடித்து விசாரணை நடத்தியதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 18 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கிருஷ்ணநாயக்யையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    காங்கயம் அருகே தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர் வழி கிராமம். இக் கிராமத்தில் தனியார் குவாரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (23) என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது சந்தோஷ் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் சந்தோஷ் நாயக்கை அவருடன் வேலை பார்த்து வரும் பிஜூ ஹெம்ப்ரம் (25) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதால் அங்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் உஷார்படுத்தப்பட்டது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையில் போலீசார் சோதனை செய்த போது கேரளாவில் இருந்து ஒடிசா செல்லும் டன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டி பாத் ரூமில் பதுங்கி இருந்த பிஜூ ஹெம்ப்ரம் கைது செய்யப்பட்டார்.

    அவர் காங்கயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே பாலீஸ் போடுவதாக பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வட மாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சிவக்குமார். குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி பிரீத்தியிடம் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் நகையை பாலீஸ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். இதற்காக தனது வெள்ளி கொலுசு மற்றும் தாலி சங்கிலியை அவர்களிடம் பிரீத்தி கொடுத்துள்ளார்.

    நகை பாலீஸ்போட்டு அந்த வாலிபர்கள் அவரிடம் திருப்பி கொடுத்தனர். அப்போது தாலி சங்கிலி அறுந்த நிலையில் இருந்தது. இதனால் பிரீத்தி சத்தம் போட்டார்.

    2 வடமாநில வாலிபர்களும் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி 2 பேரையும் மடக்கி பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சதீஷ்குமார்ஷா (வயது32), முல்முல்குமார் (22) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    ×