என் மலர்
நீங்கள் தேடியது "snatch jewellery"
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சிவக்குமார். குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பிரீத்தியிடம் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் நகையை பாலீஸ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். இதற்காக தனது வெள்ளி கொலுசு மற்றும் தாலி சங்கிலியை அவர்களிடம் பிரீத்தி கொடுத்துள்ளார்.
நகை பாலீஸ்போட்டு அந்த வாலிபர்கள் அவரிடம் திருப்பி கொடுத்தனர். அப்போது தாலி சங்கிலி அறுந்த நிலையில் இருந்தது. இதனால் பிரீத்தி சத்தம் போட்டார்.
2 வடமாநில வாலிபர்களும் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி 2 பேரையும் மடக்கி பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சதீஷ்குமார்ஷா (வயது32), முல்முல்குமார் (22) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.






