search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே 104 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது
    X

    மதுரை அருகே 104 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா பதுக்கியதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் பேரில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி, பாப்பாபட்டி பகுதியில் கஞ்சா பதுக்கிய ஜெயக்குமார் (வயது 32), சந்திரன் (34), ராகதேவன் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    செக்கானூரணி மீனாட்சி பட்டியில் வேளாங்கண்ணி என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியில் பரமன் (42), அவரது மனைவி லட்சுமி (36) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அச்சம்பத்து பகுதியில் ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கீரிப்பட்டி பகுதியில் போலித்தேவன் (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆஸ்டின்பட்டி, உச்சப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிய சரஸ்வதி (62), கார்த்திக் பாலு (36) ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 7 1/2 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ. 17 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 104 கிலோ கஞ்சா பதுக்கியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கும்பலை பிடிக்கும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×