search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் முகாம்"

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 355 மனுக்கள் பெறப்பட்டது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர்பழனி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நேற்றுநடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 355 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர கை சைக்கிள் வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு, ரூ.19,500 மதிப்பில் 3 சக்கர கை சைக்கிளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர்விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்வளர்மதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 103 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இந்த முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 103 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார் மனுக்களை அதிகம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி,


    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் புகார் மனுக்கள் கொடுக்காமல் ஏராளமான பொதுமக்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக போலீசாரிடம் நேரில் முறையிட்டனர். அவர்களுக்கு போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த குறை தீர்க்கும் முகாம்களில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு, நிலத்தகராறு தொடர்பாக புகார் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பாக இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, 6 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகள் மற்றும் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.

    மேலும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 624 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும், ஏப்ரல் 2023 முதல் தற்போது வரை 154 பெண்குழந்தை களுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தி ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று, உயர்கல்வி படித்து வருகின்றனர்.

    இந்த மாவட்டத்தில் சமூகநல அலுவலக களப்பணி யாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொண்டு,

    புதிய பயனாளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும், இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

    எனவே, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தை களை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.
    • இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

    இதில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

    இதேபோல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்ககோவன், ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர்.

    இந்த முகாமில் நிலப்பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 97 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டது.

    இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன.

    இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 13 இடங்களில் காவல் துறை சார்பில் மெகா குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலு வலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமுக்கு வந்திருந்த பெண்கள் தங்களது குறைகளை கடுமையான கோபத்துடன் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.

    புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் இளம் ஆசிரியை ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்து அதிர வைத்தார். நான் வேப்பேரியில் வசித்து வந்தபோது எனது கணவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். தனது நண்பர்களை அழைத்து வந்து அவர்களோடும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல செக்சில் ஈடுபட அழைத்த அவர் நண்பர்களுடனும் அது போன்று இருக்க அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இன்றைய குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்துள்ளேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆவேசப்பட்டார். அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்.

    இருப்பினும் அவர் ஆதங்கம் குறையவில்லை. தனது கணவர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தரையில் புரண்டு அழுதார். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதை தொடர்ந்து ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.

    இவரைப் போன்று ஏராளமான பெண்கள் தங்களது குறைகளுக்காக துணை கமிஷனர் அலுவலகத்தில் கோஷம் போட்டு தரையில் விழுந்து புரண்டனர்.

    அவர்கள் அனைவரையும் பெண் போலீசார் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
    • மேயர் மகேஷ் உறுதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வார்டு, வார்டாக சென்று ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அந்த பணிகளை துரிதப்படுத்தி னார். நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சி யாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் அறிவித்தார்.

    அதன்படி இன்று முதல் வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், சுனில் அரசு மற்றும் கவுன்சி லர்கள் கலந்துகொண்டனர்.

    பொதுமக்கள் வீட்டு வரி கட்டணம் குறைக்க கோரியும், சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினை, வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை சீரமைக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் மகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோ வில் மாநகராட்சி மேயராக பதவியேற்று 16 மாதங்கள் ஆகிறது. பதவியேற்ற பிறகு ஒவ்வொரு வார்டாக சென்று தினமும் காலை ஆய்வு செய்தேன். நடந்து சென்றும், இருசக்கர வாகனங்களில் சென்றும் ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சி மாற்ற ரூ.267 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்.

    பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உட னடி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வரி விதிப்பு பெயர் மாற்றம் தொடர்பாக மனுக்கள் வந்துள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு இதுவரை ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது. அந்த பணிகள் தற்பொழுது நடை பெற்று வரு கின்றன.

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரு சில சாலைகளை இருவழி சாலைகளாக மாற்ற திட்டமி டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடை உரிமை யாளர்களிடம் பேசி உள்ளோம். அவர்களும் இடம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அந்த இடத்தை பார்வையிட்டு வரையறை செய்து வருகிறார்கள். விரைவில் வடசேரி, மணிமேடை சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமை தாங்கினார்.

    முகாமில் நாச்சியாபுரம், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராஜ், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி, சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு அரண் மனை எதிரே அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தபால்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் முன்கூட்டியே மனுவாக அளித்து பயன் பெறலாம்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப் பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் பெயர், பெறுபவரின் பெயர், ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய வற்றுக்கான விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இதேபோல சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தி யடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம். அதன் பேரில் அளிக்கப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. தனியார் கூரிய ரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை தீத்தாரப்பன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாத புரம் அஞ்சல் கோட்டம், ராமநாதபுரம் என்ற முகவ ரிக்கு வருகிற 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் உறையின் மீது தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ஜூன் 23 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    • கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 406 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர், மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூகப் பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் மனுக்களை அளித்தனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
    • DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திருப்பூர் ரெயில் நிலையம் முன் தலைமை தபால் நிலைய கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ளது. தபால் சேவையை பற்றி விவாதிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரியில் DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை தெற்கு கோட்டத்தில் நாளை மி்ன்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (16-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) அம்சவள்ளி தலைமையில் நடக்கிறது.

    இதில் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன தெரிவித்துள்ளார்.

    ×