என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

நண்பர்களோடு சேர்ந்து கணவர் குரூப் செக்சுக்கு அழைக்கிறார் - கீழ்ப்பாக்கம் குறைதீர்க்கும் முகாமில் ஆசிரியை பரபரப்பு குற்றச்சாட்டு

- பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
- ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.
சென்னை:
சென்னையில் இன்று 13 இடங்களில் காவல் துறை சார்பில் மெகா குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலு வலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமுக்கு வந்திருந்த பெண்கள் தங்களது குறைகளை கடுமையான கோபத்துடன் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.
புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் இளம் ஆசிரியை ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்து அதிர வைத்தார். நான் வேப்பேரியில் வசித்து வந்தபோது எனது கணவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். தனது நண்பர்களை அழைத்து வந்து அவர்களோடும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல செக்சில் ஈடுபட அழைத்த அவர் நண்பர்களுடனும் அது போன்று இருக்க அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இன்றைய குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்துள்ளேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆவேசப்பட்டார். அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்.
இருப்பினும் அவர் ஆதங்கம் குறையவில்லை. தனது கணவர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தரையில் புரண்டு அழுதார். இதனால் பரபரப்பு நிலவியது.
இதை தொடர்ந்து ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.
இவரைப் போன்று ஏராளமான பெண்கள் தங்களது குறைகளுக்காக துணை கமிஷனர் அலுவலகத்தில் கோஷம் போட்டு தரையில் விழுந்து புரண்டனர்.
அவர்கள் அனைவரையும் பெண் போலீசார் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.