search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாழக்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம்
    X

    வியாழக்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம்

    • பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
    • மேயர் மகேஷ் உறுதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வார்டு, வார்டாக சென்று ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அந்த பணிகளை துரிதப்படுத்தி னார். நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சி யாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் அறிவித்தார்.

    அதன்படி இன்று முதல் வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், சுனில் அரசு மற்றும் கவுன்சி லர்கள் கலந்துகொண்டனர்.

    பொதுமக்கள் வீட்டு வரி கட்டணம் குறைக்க கோரியும், சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினை, வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை சீரமைக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் மகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோ வில் மாநகராட்சி மேயராக பதவியேற்று 16 மாதங்கள் ஆகிறது. பதவியேற்ற பிறகு ஒவ்வொரு வார்டாக சென்று தினமும் காலை ஆய்வு செய்தேன். நடந்து சென்றும், இருசக்கர வாகனங்களில் சென்றும் ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சி மாற்ற ரூ.267 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்.

    பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உட னடி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வரி விதிப்பு பெயர் மாற்றம் தொடர்பாக மனுக்கள் வந்துள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு இதுவரை ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது. அந்த பணிகள் தற்பொழுது நடை பெற்று வரு கின்றன.

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரு சில சாலைகளை இருவழி சாலைகளாக மாற்ற திட்டமி டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடை உரிமை யாளர்களிடம் பேசி உள்ளோம். அவர்களும் இடம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அந்த இடத்தை பார்வையிட்டு வரையறை செய்து வருகிறார்கள். விரைவில் வடசேரி, மணிமேடை சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×