search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுக்களுக்கு தீர்வு"

    • சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.
    • இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

    இதில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

    இதேபோல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்ககோவன், ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர்.

    இந்த முகாமில் நிலப்பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 97 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டது.

    இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன.

    இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது

    • பெரியகோட்டை ஊராட்சியில் மக்களின் கோரிக்கை ஏற்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 200 மனுக்களை கிராம பொதுமக்கள் கொடுத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் மக்களின் கோரிக்கை ஏற்பு முகாம் வட்டாட்சியர் முத்துசாமி தலைமையில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிச்செல்வி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான காளியப்பன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், ஊராட்சி மன்ற துணைத்தவைவர், வார்டு உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் வீட்டுமனை பட்டா வீடு பராமரிப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நிலம் வழங்க, கால்நடைகள் வளர்க்க உள்ளிட்ட 200 மனுக்கள் கிராம பொதுமக்கள் கொடுத்தனர்.

    இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்களைக் கொண்டு மனுக்களின் மீதான தன்மையை பொறுத்து உடனடியாக இம்முகாமில் தீர்வு காணப்பட்டன. முகாமில் பெரிய கோட்டைஊராட்சி செயலர் சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×