search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மாவட்டத்தில்"

    • அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. போது மான அளவு மழை பெய்யா ததால் பாசன குளங்களில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை தூறியது. மயிலாடி, குழித்துறை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் ஒரு மணி நேரமாக மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்ச மாக 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 33.22 அடியாக இருந்தது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணையில் இருந்து 937 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தோவாளை, அனந்தனார், நாஞ்சில் நாடு புத்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • லைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு ம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

    டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாக தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தோவாளை வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், கல்குளம் வருவாய் வட்டத்தில் உள்ள 126 கிராமங்களின் நியாய விலை கடை பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பத்மனாபபுரம் மற்றும் குளச்சல் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடை பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    கல்லுகூட்டம், கோத நல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தலா 5, குமார புரம் பேரூராட்சி பகுதியில் 7, மணவாளகுறிச்சி, நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் தலா 6, மண்டைக்காடு பேரூ ராட்சியில் 8, வெள்ளிமலை பேரூராட்சியில் 5 நியாய விலைக்கடைகளில் முதல் கட்டமாக விண்ணப் பதிவு முகாம்கள் நடைபெறும். மேலும் வில்லுக்குறி பேரூ ராட்சிக்குட்பட்ட 14, 4, 5, 11, 6, 4 ஆகிய வார்டுகளிலுள்ள நியாயவிலை கடைகளிலும் முகாம் நடைபெறும்.

    திருவிதாங்கோடு பேரூ ராட்சிக்குட்பட்ட வார்டு எண். 12, திங்கள் நகர் பேருராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1, 11, 12, 8, 15 ஆகியவற்றில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் கள் நடைபெறும்.

    சடையமங்கலம், முத்தல குறிச்சி, தென்கரை, வெள்ளி சந்தை கக்கோட்டுதலை, நெட்டாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 2 கட்டடிமாங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 5, குருந்தன்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7, சைமன் காலனி பகுதியில் 4, முட்டம் பகுதியில் 8 நியாய விலைக்கடைகளிலும், தலக்குளம் ஊராட்சி பகுதியிலுள்ள 1 நியாய விலைக்கடையிலும் முதற்கட்டமாக விண்ணபப்பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவட்டார் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், கிள்ளியூர் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், விளவங்கோடு வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். கல்குளம் வட்டத்தில் மீத முள்ள 49 நியாய விலை கடைப் பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். கொல்லங் கோடு நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள நியாய விலைக் கடை பகுதியில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.கல்குளம் வட்டத்தில் இரணியல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், கப்பியறை பேரூராட்சிப் பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், முளகுமூடு பேரூராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடைகளிலும், வாள்வச்சகோஷ்டம் பேரூ ராட்சி பகுதியிலுள்ள 8 நியாயவிலைக்கடைகளிலும் இரண்டாம் கட்ட விண்ணப் பபதிவு முகாம் நடைபெறும்.

    மேலும் வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 15, திருவி தாங்கோடு பேரூராட்சி பகுதியில் வார்டு எண். 6, 7, 12, திங்கள்நகர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 5 ஆகிய நியாய விலை கடைகளிலும், நுள்ளிவிளை ஊராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடை களிலும், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், மருதூர்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 நியாய விலைக்கடைகளிலும், ஆத்திவிளை ஊராட்சியில் உள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பல் வேறு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்கு டன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப் பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (கிராம ஊராட்சிகள்) உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதால் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயில்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும்.

    இந்த ரெயில் நிலையத்தில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பயணம் செய்து வருகி றார்கள். ஆனால் ஆரல்வா ய்மொழி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    பிளாட்பாரங்களில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். முட்பு தருக்குள் விஷ ஜந்துக்கள் இருந்தால் கூட தெரியாத அளவிற்கு வளர்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ரெயில் பயணிகளையும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்க மாகவும் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவ னந்தபுரத்திற்கு காலை நேரங்களில் பாசஞ்சர் ரெயிலும் செல்கிறது. இந்த ரெயில்களை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மார்க்கமாக உள்ள ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இரணியல், பள்ளியாடி, குழித்துறை ரெயில் நிலை யத்தில் அதிக அளவு முட்பு தர்கள் உள்ளது. அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
    • குமரியில் ஒரே மாதத்தில் 109 வாகனங்கள் பறிமுதல் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    31-ந்தேதி வரை தனி தாசில்தார்கள் தலைமை யிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் அவை கைப்பற்றப்பட்டு நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அபராத நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.

    கனிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினர் மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றி சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்து சென்ற 9 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள் மீது தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்து சென்ற 27 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட் டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் காவல் துறை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710-ம், மதுரை மண்டல பறக்கும் படை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17 லட்சத்து 41 ஆயிரம், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழு வாயிலாக 29 வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் என்று மொத்தம் ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • மதகுகள் வழியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளத்தை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னிபூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. கன்னிபூ சாகு படிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று பேச்சிப்பாறை அணை திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டி ருந்தது. இதையடுத்து இன்று காலை பேச்சிப்பாறை அணையின் அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் அணையின் மதகுகளை திறந்து வைத்தார். கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அந்த தண்ணீரில் பூக்கள் தூவப்பட்டது. அணையிலிருந்து இன்று 100 கன அடி தண்ணீர் வெளியிட்டப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தோவாளை சானல் மற்றும் அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 40.55 அடியாக இருந்தது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு -1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது.
    • சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது.

    நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் அங்கு அதிகபட்சமாக 53.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 43, சிற்றாறு 1-5, பூதப்பாண்டி 17.6, கன்னிமார் 12.8, நாகர்கோவில் 3, சுருளோடு 53.6, தக்கலை 2.2, பாலமோர் 35.6, முள்ளங்கினாவிளை 52, அடையாமடை 2.2, முக்கடல் 11.6.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 38.22 அடியாக இருந்தது. அணைக்கு 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. அணைக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் 2021- 2022 முதல் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரையில் 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் குமரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக குமரி மாவட் டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

    ஆகவே குமரி மாவட் டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட் டம், மயிலாட்டம், தேவ ராட்டம், தோல்பா வைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளை யாட்டம், மானாட் டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழி யாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங் கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வய திற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை சுடர்மணி விருது, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருது, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    வயது மற்றும் கலைப்புல மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப் படும். குமரி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    மேலும் கடந்த ஆண்டு களில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலை ஞர்கள் தற்போது புதியதாக கண்டிப்பாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்நிலை யில், குமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்து டன் வயதுச்சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் 'ஆ' குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு 20 நாட்களுக்குள் விண்ணப் பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குழித்துறை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    சுமார் 2 மணி நேரத்திற் கும் மேலாக கொட்டி தீர்த்த மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, புத்தன் அணை, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, குலசேகரம், களியல், சுருளோடு பகுதியிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்கலை, சரல்விளை, வண்ணான்விளை பகுதியை சேர்ந்த சுஜுன் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள்.

    தொடர் மழையின் கார ணமாக திற்பரப்பு அருவி யில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.47 அடி யாக உள்ளது. அணைக்கு 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.8, பூதப்பாண்டி 3.2, களியல் 4.6, கன்னிமார் 6.8, குழித் துறை 62.2, புத்தன்அணை 15, சுருளோடு 7, தக்கலை 20, பாலமோர் 4.2, திற்பரப்பு 5.8, ஆரல்வாய்மொழி 16, கோழிபோர்விளை 38.5, அடையாமடை 24, முள் ளங்கினாவிளை 22.4.

    ×