search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை"

    • மாவட்ட அளவிலான போட்டிகள் 2 நாட்கள் அவ்வையார் அரசு பள்ளியில் நடைபெறுகிறது.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாண வர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலை வடிவங்களை குறித்த அறிவையும் புரிதலையும் மாணவர்களுக்கு உருவாக்கி நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க கலை விழாவை அரசு நடத்தி வருகிறது.

    இதில் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காட்சிகலை, நாடகம் மற்றும் தனிநபர் நடிப்பு எனும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2015 - 16 -ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து 2023 - 24 -ம் ஆண்டிற்கான கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீனிவாசன், துரைராஜி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டம் கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் கட்டபடவுள்ள புதிய கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக் குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் ரூ.7 கோடியே 97.50 மதிப்பீட்டில் புதியதாக கட்டபடவுள்ள கலை மற்றும் அறிவியில் கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு குமராட்சி ஊராட்சிக்குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் 4.02 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 32 ஆயிரத்து 626 சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன் , செயற்பொறியாளர் தொழில்நுட்ப பிரிவு கோட்டம் (தஞ்சாவூர்) பாலசுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டன

    • விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் 2021- 2022 முதல் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரையில் 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் குமரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக குமரி மாவட் டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

    ஆகவே குமரி மாவட் டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட் டம், மயிலாட்டம், தேவ ராட்டம், தோல்பா வைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளை யாட்டம், மானாட் டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழி யாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங் கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வய திற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை சுடர்மணி விருது, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருது, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    வயது மற்றும் கலைப்புல மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப் படும். குமரி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    மேலும் கடந்த ஆண்டு களில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலை ஞர்கள் தற்போது புதியதாக கண்டிப்பாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்நிலை யில், குமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்து டன் வயதுச்சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் 'ஆ' குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு 20 நாட்களுக்குள் விண்ணப் பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல் குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ –மாணவியர் படித்து வருகின்றனர்.
    • அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் மண்ணூர் கிராமம் அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்திற்கு, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை சாலை போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படை வசதிகள் கிடைத்தது.

    இந்த மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ

    –மாணவியர் படித்து வருகின்ற னர். தலைமையாசிரியர் கதிர்வேல் உள்பட வெங்க டாஜலம், பா.சக்திவேல், நல்லுசாமி, ர.சரண்யா, லீலாவதி ஆகிய 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்திய வட்டார அளவி லான கலைத்திருவிழா குழு நடனப்போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவ–மாணவியர், கா.காவியா.

    பொ.மாலதி.மு.ரஞ்சித்கு மார், மு.சந்ரு, த.வினோத், த.லோகேஸ்வரன், ஜெ.கோகுல்கிருஷ்ணா, ஆ.செல்லதுரை, பொ.சரத்கு மார் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலிடம் பிடித்து

    மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    இதனையடுத்து, அண்மையில் மதுரையில் செளராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா நடனப் போட்டியில் பங்கேற்ற இப்பள்ளிக் குழுவினர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து போட்டியில் பங்கேற்ற குழுக்களை விட மிகச் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.

    முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு திரும்பிய மாணவ–மாணவியருக்கு, மண்ணுார் மற்றும் மாமாஞ்சி மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து, மேள வாத்தியம் முழுங்க பாரம்பரிய முறைப்படி ஆரத்தியெடுத்து, மாலை யணிவித்து பொன்னாடை போர்த்தி அதிர் வேட்டு முழங்க வரவேற்பளித்து கெளரவித்தனர்.

    மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கணித ஆசிரியர் சக்திவேல் மற்றும்

    ஊக்குவித்த தலைமை யாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர். வட்டார, மாவட்ட, மாநில பள்ளிக்கல்வித்துறை உயரதி காரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க தலைவர் ஜோ கலைஞரின் நாட்டிய பள்ளி ஆசிரியை கிளாடி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சத்திய பிரியா, ரெட்கிராஸ் அபி, கவிஞர் சரண், சுகுமார், வணிகர் சங்க கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி குழந்தைகள் பாரதியின் பாடல்களுக்கு நாட்டியம் ஆடி அனனவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதில் 100-க்கனக்கான மாணவிகள் பங்கேற்றனர்.

    தாளவாடி, அந்தியூர் அரசு கலை கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அந்தியூர் பகுதியில் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்தியூர் பகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டில்கல்லூரி தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்தியூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து 2022-2023-ம் ஆண்டுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. பி.ஏ. தமிழ் பி.ஏ. ஆங்கிலம். பி.எஸ்.சி.கணிதம். பி.எஸ்.சி. கணினி அறிவியல், .பி.காம். இந்த பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.

    இதற்கான வகுப்பறைகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதே போல் தாளவாடி பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இனறு தொடங்கி நடந்து வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாழப்பாடியில் பரதநாட்டிய அரங்கேற்ற கலை விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, லதா நாட்டியாலயா இசைப்பள்ளி சார்பில், வாழப்பாடியில் முதன்முறையாக பரதநாட்டியம் மற்றும் குரலிசை, இசைக்கருவிகள் அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, பரதநாட்டிய இசைப்பள்ளி ஆசிரியை லதா வெங்கடேஷ் வரவேற்றார். வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.

    வாழப்பாடி இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி, இலக்கிய பேரவை செயலர் சிவ.எம்கோ, அரசு மருத்துவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில், பரதநாட்டியம், குரலிசை, இசைக்கருவிகளை வாசித்து, குழந்தைகள் அரங்கேற்றம் செய்தனர்.

    முறையாக பயிற்சி பெற்று நேர்த்தியாக அரங்கேற்றம் செய்த குழந்தைகளுக்கு, சென்றாய பெருமாள் கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடாசலம், தாண்டவராயன், கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர் சீனிவாசன், மா. கணேசன், கடலூர் மாவட்ட ஆரிய வைசிய மகாசபை நிர்வாகி வினோத்குமார், தனுஷா ஆகியோர், வளர் கலைமணி விருது மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முன்னதாக வாழப்பாடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சலங்கை பூஜை நடைபெற்றது.

    இவ்விழாவில், காங்கிரஸ் பிரமுகர் அத்தனூர்பட்டி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமாரி சரவணன், சிங்கிபுரம் விவசாயக் கூட்டமைப்பு தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லதா நாட்டியாலயா இசைப்பள்ளி பயிற்றுநர் லதா வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    ×