search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பேச்சிப்பாறையில் 8.2 மில்லி மீட்டர்பதிவு
    X

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பேச்சிப்பாறையில் 8.2 மில்லி மீட்டர்பதிவு

    • அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. போது மான அளவு மழை பெய்யா ததால் பாசன குளங்களில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை தூறியது. மயிலாடி, குழித்துறை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் ஒரு மணி நேரமாக மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்ச மாக 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 33.22 அடியாக இருந்தது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணையில் இருந்து 937 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தோவாளை, அனந்தனார், நாஞ்சில் நாடு புத்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×