search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் சட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
    • 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை தி.மு.க. அரசு போட்டிருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மாபள்ளம், நெடுங்கல், அத்தி, வட ஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளைநிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தி.மு.க. அரசு பிறப்பித்துள்ளது.

    இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப்போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் தி.மு.க. அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை தி.மு.க. அரசு போட்டிருக்கிறது.

    மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக்கூடிய முள்வேலிகளைப் போல, அங்கே முள்வேலிகளைக் கொண்டு வந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டு வந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

    அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், தி.மு.க. அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

    விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
    • ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அருகே கடந்த மாதம் 25-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டை கவர்னர் மாளிகையை நோக்கி வீசினான். அது கவர்னர் மாளிகை நுழைவாயில் முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன்பு விழுந்து வெடித்தது.

    பின்னர் தப்பி ஓட முயன்ற அவனை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் விரட்டி பிடித்தனர். அப்போது, அவனிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. அவன் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

    இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    • பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சிக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் மூலம் பொதுமக்களின் பணத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சிக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    எட்டுக்கும் மேற்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சுமார் 20 பேர் குண்டர் சட்டம் போடும் வகையில் பட்டியல் தயாராக உள்ளது. பொதுமக்களை திட்டமிட்டு பணத்தை ஏமாற்றும் பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் கடும் சட்டத்தில் தண்டிக்கப்படுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பாலா மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாலா (வயது 31). இவர் மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சசாங்சாய் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆணைக்கிணங்க பாலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.

    வண்டலூர்:

    மறைமலைநகர், மேற்கு பொத்தேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(22). அ.தி.மு.க.பிரமுகர். இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொ டர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீ சார் கண்காணித்து அவர் களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.

    மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதை தகரா றில் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலெக்டருக்கு பரிந்து ரை செய்தார். கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட் டுள்ள இசக்கிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டி ருந்த இசக்கிமுத்து பாளை யங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (20). இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஏற்கனவே பூதப்பாண்டி போலீசில் வழக்கு உள்ளது. வினேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார்.

    இதையடுத்து நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப் பட்டு இருந்த வினேசை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள், 64 சப் -இன்ஸ்பெக்டர்கள் உள்பட 547 போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்.

    இதில் 4 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.37 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் சூதாடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.
    • ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப டுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். சமீபகாலமாக பிடி வாரண்டு குற்றவாளிகள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தலைமறைவு குற்றவாளி களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பூதப்பாண்டி அருகே நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 57), தொழிலாளி. இவரு க்கும், அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்டு என்ற நிச்சர் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிச்சர்டை கைது செய்து ஜெயிலில் அடை த்தனர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்து ரை செய்தார்.

    இதையடுத்து ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீசார் இன்று பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.
    • கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் 13 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியை சேர்ந்த ஆரோன் (வயது 31), பாரதி நகரை சேர்ந்த இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான மூக்காண்டி என்ற ராஜா (30), அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த சஜின்ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதி தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரம் மணிகண்டன் (39) சென்னை மயிலாப்பூரர் சம்பத்குமார் (50) மற்றும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி (எ) ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் 13 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சிவசுப்பு ஆரோனை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.

    இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உட்பட 137பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறா
    • 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

    குளச்சல் :

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53).

    இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். ஜூலை மாதம் 8-ந்தேதி இரவு கோபால கிருஷ்ணன் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீடு அருகே பாதையில் செல்லும்போது அங்கு இருளில் பதுங்கி யிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.

    ஆனால் ேகாபால கிருஷ்ணன் பணப்பையை இறுக பற்றிக் கொண்டதால், மர்மநபர் ஏமாற்றத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் கோபால கிருஷ்ணனுக்கு வலது கைவிரல் துண்டானது.

    இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை வெட்டியதாக மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருண் சஜு (30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர் டுத்தப்பட்டு நாகர் கோவில் சிறையில் அடைக் கப்பட்டார்.

    இந்த நிலையில் அருண் சஜுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார். இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, அருண் சஜு மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய் தார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
    • கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் மதுரை ஆரப்பாளையம் ஆகும்.

    அழகர்சாமி மீது தெற்கு, அனுப்பர்பாளையம், சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தையும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

    அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த அம்பேத் கர் காலனியை சேர்ந்தவர் அகிலன்(எ)அகில்(வயது26). இவர், கிருஷ்ணகிரியில் சேலம் மேம்பாலம் அருகில் உள்ள கார்வேபுரம் பகுதி யில் வசித்து வந்தார்.

    இவர் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப் பள்ளி, ஓசூர் ஹட்கோ, சிப்காட், போலீஸ் ஸ்டேஷன் களில், 2 கொலை, 1 கொலை முயற்சி, 1 பெட்ரோல் குண்டு வீச்சு, ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பொது மக்களை அச்சுறுத்திய அகி லனை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன் கைது செய்தார்.

    இவ்வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகி லனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    இதையடுத்து அதற்கான ஆணையை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், சேலம் மத்திய சிறையில் வழங்கினார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அகிலனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    ×